கடவுளுக்கு மகிழ்ச்சியை கொடுப்பது எது?
 

By 
What gives God pleasure

ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு நிகழ்வு, அவரவர் மனதிற்கேற்ப மகிழ்ச்சி தருகிறது. 

'இங்கே இறைவனுக்கு எது மகிழ்ச்சி தருவதாய் அமைகிறது' என்பது குறித்து, வள்ளலார் மொழிந்த வரிகளில் பார்ப்போம்.

* உண்மை பேசுவோருக்கே மரியாதை நிலைத்து நிற்கிறது. ஆகவே, உண்மையை விட்டு விலகாதீர்கள்.

* மனிதர்கள் செய்யும்
தவறுகளுக்கெல்லாம்
அடிப்படைக் காரணம்
அவர்களின் ஆசையே.

* உடலை வருத்தி விரதம்
இருப்பதை விட, யாரையும்
துன்புறுத்தாமல் இருப்பதே
சிறந்தது.
 
* உள்ளத்தில் ஒன்றும்
உதட்டில் ஒன்றுமாக
இருப்பவர்களின் உறவை
நாடாதீர்கள்.

* எல்லா உயிர்களையும்
தன் உயிர்போல் நினைத்து,
சம உரிமை வழங்குவோரின்
மனதிலே இறைவன் வாழ்கிறான்.

* தாய் தந்தை சொல்லை
புறந்தள்ள வேண்டாம். நல்லவர்கள் மனதை, கலங்கச் செய்ய வேண்டாம்.

* எல்லா செயல்களிலும்
பொதுநலன் இருக்கட்டும்.
எல்லா பொருட்களும்
எல்லோருக்கும் கிடைக்கட்டும்.

* வாக்கு வேறு, மனம் வேறு,
செயல் வேறு என்ற நிலையில்
இறைவனை வழிபடாதீர்கள்.
மூன்றும் ஒன்றிய நிலையில்
வழிபடுங்கள்.

* உண்டியலில் காணிக்கை
செலுத்துவதற்கு பதிலாக,
பசியில் இருப்போருக்கு
வயிறார உணவு கொடுங்கள்.
அதுவே, கடவுளுக்கு
மகிழ்ச்சி கொடுக்கும்.
*

Share this story