தியானம் என்றால் என்ன?

By 
What is meditation

பற்றற்ற நிலையில், ஒன்றையே பற்றுகிற- எண்ணுகிற யோகமாம் தியானம் பற்றி சிறு விளக்கம் வாசிப்போம், வாழ்வில் மேன்மை பெறுவோம்.

* இடைவிடாத நினைவே தியானம் எனப்படும். ஒரே பொருளைப் பற்றிய தொடர்ச்சியான நினைவே தியானம் எனப்படுகிறது. 

* ஒரு பொருளில் மட்டுமே குவிக்கப்பட்ட மனம், வேறு செய்திகளைப் பற்றிய குறுக்கீடு இல்லாமல் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு அதே நிலையில் இருக்கும் என்றால், அதற்குத் தியானம் என்று பெயர்.

* தியானம் – தவம் – Meditation எல்லாம் ஒன்றுதான். தவம் : தன்னை அறிந்து தலைவனாகிய இறைநிலையை அறிதல். இதைத்தான் வள்ளலார் 'தலைவா நினை பிரியாத நிலையையும் வேண்டுவனே' என்றார்.

* தீ என்றால் அறிவு. தியானம் என்றால் பயணம். நம் மனதை அறிவை நோக்கிச் செலுத்துதல் தானமாகும். ஞானமே வடிவமாகக் கொண்ட ஆன்ம ஸ்வருபத்தில் மனதை நிலைக்கச் செய்வது தியானமாகும்.

* புலன்களை நோக்கி மனிதன் ஒட்டத்தைத் தடுத்து, அதை உள்முகமாகச் செலுத்தி அதற்கு ஒளியைத் தந்த ஆன்மாவில் இரண்டறக் கலக்கச் செய்வதே தியானமாகும்.

* எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒன்றேயாகத் தூயதாக, சிதறாததாக, வலிமையுடன், தெளிவுடன் இருக்கும் மனநிலைக்கு தியானம் என்று பெயர். இது அஷ்டாங்க யோகத்தில் ஏழாவது படியாகும்.

* விஞ்ஞானத்தில் தொட முடியாத அடிப்படை பிரச்சினை தியானம் தான். அது வசமானால் ஆளுமையானது அங்கீகாரம் பெரும். அதனுடைய நறுமணம் எங்கும் எதிலும் பரவும்.

* தன்னை அறிவது தியானமா? அல்லது தன்னை அறிவதன் மூலம், தன் ஆன்மாவை அறிவது தியானமா? அல்லது தன் ஆன்மாவை உணர்வதின் மூலம் வெட்ட வெளியில் தன்னை தொடர்புபடுத்திக் கொள்வது தியானமா? 

அல்லது ஜீவாத்மாவை பரமாத்வாவோடு இணைத்துப் பிறவி என்னும் பெருங்கடலை கடப்பது தியானமா? என்றால், இவை அனைத்தும் தியானம் என்று பொருளாகும்.

* தியானித்தல் ஆனந்தம், தியானித்தல் வலிமை,
தியானித்தல் வாழ்க்கை,
தியானித்தல் இறைநிலை. ஆதலால், நெறிமுறை பிறழாது நாளும் தியானிப்போம்.!

Share this story