வாழும் வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தம் எது.?

By 
mgrp

சென்னை, எம்.ஜி.ஆர். நகர் சக்தி வினாயகர் கோவிலில் 49 ஆம் ஆண்டு ராமர் நவமியை முன்னிட்டு, ஶ்ரீ ராமர் கல்யாணம் ஆந்திர கல்சரல் அசோசியேசன் சார்பில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.

சசிகுமார் & சாந்தி சசிகுமார் ஆகியோர், நிகழ்ச்சியில் மக்களுக்கு பிரசாதம் வழங்கினர். இதனைத் தொடர்ந்து, நேற்று (17.04.2024) எம் ஜி ஆர் நகர் சக்தி வினாயகர் கோவில் அருகில், கோடை வெயிலின் தாக்கத்தை போக்க அனைவருக்கும் நீர்மோர் வழங்கப்பட்டது. 

சாந்தா கிருஷ்ணன் தொண்டு அறக்கட்டளை ஏற்பாட்டில், ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலம் தோறும் மூன்றாவது ஆண்டாக நீர்மோர் வழங்கப்பட்டு வருகிறது. இன்று 18ஆம் தேதி 34-வது நாளாக நடைபெற்று, கோடைகாலம் முழுவதும் தொடர்ந்து வழங்கப்படுகிறது. 

இது குறித்து வழக்கறிஞர் எம்.ஜி.ஆர். நகர் கே. புகழேந்தி கூறியதாவது:

ஏழை எளிய பாமர மக்களுக்கும் உழைப்பாளிகளுக்கும் மற்றும் அனைவருக்கும் நீர் மோர் வழங்குவதால் அதனை அவர்கள் பருகும் நேரம் சந்தோஷம் வெளிப்படுகிறது; எங்களுக்கும் மனநிறைவும் கிடைக்கிறது. வசதியானவர்கள் யாவரும் சமூக அக்கறையோடு மக்கள் பணியாற்ற, தன்னலம் கருதாது முன் வர வேண்டும். 

குருமார்கள் அனைவரும் கூறுவதெல்லாம், 'பிறருக்கு உதவிகரமாய் வாழ்தலே மிகச் சிறந்த வாழ்வாகும்' என போதிக்கின்றனர். எனவே அன்னதானம், ரத்ததானம் என வழங்கி ஏற்றத்தாழ்வு பாராது மக்கள் பணியாற்றும் எண்ணம் வேண்டும். அதுதான் வாழும் வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தம். 

அது இல்லையெனில், மகத்தான இந்த மனித வாழ்க்கை.. ஏதோ ஒரு இயந்திரத்தனமாய் வாழ்தலுக்கு சமமாகும்' என எம்.ஜி.ஆர்.நகர் கே.புகழேந்தி தெரிவித்தார்.
 

Share this story