அழியா காதல் தம்பதியர் யார்?
 

By 
Who is the immortal romantic couple

அழகான வாழ்க்கையை அற்புதமாய் வாழ, முன்னோர்கள் வகுத்து அளித்தனர் பற்பல கலைகளின் வாயிலாக.! அதில், ஒன்று, இறையுரு தரித்து, இந்து மதம் ஏற்று வணங்கும் தெய்வீகச் சிற்பக்கலைகள்.! அவற்றில் அரிதான கஜூராஹோ குறித்து வாழ்வியல் பார்த்து, இனிதாய் மேலும் கூடுவோம்.!

* கஜுராகோ சிற்பங்கள் காமத்தின் அழகியலுக்கும், கட்டுமானக் கலைக்கும், இணையற்ற இல்லற வாழ்க்கைக்கும் உலகப்புகழ் பெற்றது.

* யுனெஸ்கோவின் உலகப் பண்பாட்டு சின்னங்களில் ஒன்று, இந்த கஜுராகோ கோவில்கள்.

* இந்தியாவின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிறது.

 *கஜுராகோ, சந்டெல்லா அரசவையின் கலாச்சார தலைநகரம்.

* கஜுராகோவைச் சுற்றி, அரணாக 8 நுழைவு, வெளியேறும் கதவுகள் இருந்தன. இந்த ஒவ்வொரு கதவும் இரண்டு பேரீச்சை மரங்களுக்கு இடையே இருந்தன. ஹிந்தியில், கஜுரா என்றால் பேரீச்சை. அதனால்தான், கஜுராகோ என்று அழைக்கப்படுகிறது.

* சந்டெல்லா அரசவை காலத்தில் - 950 - 1050' ஆம் வருடத்தில், கஜுராகோ கோவில்கள் கட்டப்பட்டன. பொலிவான இளஞ்சிவப்பு, மஞ்சள் மண் கற்களைக் கொண்டு கட்டப்பட்டது கஜுராகோ கோவில்கள்.

* ஒரு காலத்தில் 85- க்கும் மேற்பட்ட கோவில்கள் இருந்தன. இயற்கைச் சீற்றத்தால், அதில், பல சிதிலமடைந்து, இப்போது 22 கோவில்கள் மட்டுமே இருக்கின்றன.

* கஜுராகோ என்றாலே, காமத்தை சித்தரிக்கும் சிற்பங்கள் என்று தவறுதலான கண்ணோட்டம் பலரிடம் இருக்கிறது. உண்மையில் 10 சதவீதம் அளவே, இதுபோல் சிற்பங்கள் இருக்கின்றன. மீதி, ஏனைய சிற்பங்கள் - அந்தக் கால வாழ்க்கை முறையை பிரதிபலிப்பதுபோல, வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. 

* குயவர்கள் மண் பாண்டங்கள் செய்வது, விவசாயிகள் உழுவது, இசைக் கலைஞர்கள் வாத்தியங்களை வாசிப்பது போன்று நிறைய சிற்பங்கள் இருக்கின்றன.

* இந்திய தொல்லியல் துறை, கஜுராகோ சிற்பங்களை சிறந்த பாதுகாக்கப்பட்ட பழங்காலத்து இந்திய சிற்பங்கள் என்று சான்றிதழ் அளித்திருக்கிறது.

* கஜுராகோ கோவில்கள் - மேற்கு, கிழக்கு, தெற்கு என்று மூன்று விதமாக பிரிந்திருக்கின்றன.

* நல்ல இல்லறம் உணர்த்தும் இத்தகு சிற்பங்களை, கண்டுணர்வோர், அழியா காதல் தம்பதியர் ஆவர்.

Share this story