பிள்ளையாருக்கு துளசி மாலை அணிவிப்பது ஏன்?
 

By 
dul

பிள்ளையாருக்கு விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் துளசி மாலை அணிவிக்கப்படுகிறது. அது ஏன் தெரியுமா? அதற்கு ஒரு கதை கூறப்படுகிறது.

விநாயக பெருமானை திருமணம் செய்ய வேண்டும் என்று துளசி பல்லாண்டு காலம் தவம் இருந்தாள். எப்போது என்னை மணம் முடிப்பீர்கள் என்று விநாயகரை கேட்டுக்கொண்டே இருந்தாள். இதனால் கோபம் அடைந்த விநாயக பெருமான் துளசியை பார்த்து நீ ஒரு செடியாக மாறக் கடவது என்று கூறினார்.

இதை கேட்ட துளசி மனம் வருந்தினாள். விநாயகரை பார்த்து என்னை இப்படி சபித்து விட்டீர்களே, ஒரு நாளேனும் உங்கள் திரு மேனியை நான் தாங்கியிருக்க அருள் புரிய வேண்டும் என்று வேண்டினாள். அவளது வேண்டுகோளை விநாயகர் ஏற்றுக்கொண்டார்.

விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் என் திரு மேனியில் நீ தங்கி இருக்கலாம் என்று வரம் கொடுத்தார். அதன்படி விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் பூஜையின்போது விநாயகருக்கு துளசி மாலை அணிவிக்கப்படுகிறது.
 

Share this story