வழிபாடுகளில், சங்கு முக்கிய இடம் வகிப்பது ஏன்?

 Why does the conch play an important role in worship

சங்குக்கு ஆகாயத்தில் உள்ள வேத மந்திரங்களை ஈர்க்கும் சக்தி உண்டு. 

சங்கில் உள்ள ஜலதாளயோக ஜோதி சக்தியானது நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுத் தரும் ஆற்றல் கொண்டது. 

இத்தகு சைவ, வைணவ வழிபாடுகளில் சிறப்புமிக்க சங்கு குறித்து, சிலதகவல்கள் பார்ப்போம்.

சங்கு சக்கரதாரி :

தேவர்களும், அசுரர்களும் ஒன்றிணைந்து, பாற்கடலைக் கடந்த போது, லட்சுமியுடன் சங்கும் சேர்ந்து வெளியில் வந்தது. இந்த உலகுக்கு, சங்கு அறிமுகமானது இப்படித்தான்.

லட்சுமியின் அழகில் மயங்கி அவளை ,திருமணம் செய்து கொண்ட மகா விஷ்ணு, சங்குவை இடது கையில் ஏந்தி ‘சங்கு சக்கரதாரி’யாக மாறினார். 

அன்று முதல் விஷ்ணுவின் படைகளில் ‘சங்குப் படை’ முக்கியமானதாக மாறியது என்று விஷ்ணு புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மகாவிஷ்ணு, லட்சுமி இருவரிடமும் சங்கு நிலை பெற்றுள்ளதால், அது செல்வம், வெற்றி உள்பட அனைத்தையும் தரும் என்று புராணங்கள் சொல்கின்றன.

துர்சக்திகளை விரட்டும் :

லட்சுமியின் அம்சமாகக் கருதப்படும் சங்கு, ஓம் எனும் பிரணவ மந்திர வடிவில் அமைந்துள்ளது. 

சங்கில் இருந்தும் ஓம் எனும் ஒலி எழும். இந்த ஒலி துர்சக்திகளை விரட்டும் ஆற்றல் கொண்டது. எனவேதான், வீட்டில் சங்கு வைத்து வழிபடுவது நல்லது என்று கூறப்படுகிறது. 

மகா தீர்த்தம் :

சங்கில் நீர் விட்டு கும்பத்தின் மேல் வைத்து, பூக்கள் போட்டு, பூஜை செய்து ஆராதனை நடத்தி, சங்கில் உள்ள நீரை சாமி சிலைகள் மீது அபிஷேகம் செய்தால், அது தீர்த்தமாக மாறி விடும் என்கிறார்கள்.

இப்படி சாதாரண நீரை, சக்தி வாய்ந்த மகா தீர்த்தமாக மாற்றிவிடும் சக்தி படைத்த சங்கின் முன்பாகத்தில் கங்கை, மத்தியில் வருணன், பின்பாகத்தில் பிரஜாபதி வசிக்கிறார்களாம். இவர்கள் தவிர, சங்கில் குபேரன் உள்பட எல்லா தேவதைகளும் வசிப்பதாக சொல்கிறார்கள். 

இதனால்தான் சைவ, வைணவ ஆலய வழிபாடுகளில் சங்கு பிரதான இடம் வகிக்கிறது.

Share this story