3 பெண்கள் உள்பட 12 பேருக்கு கசையடி : தலிபான்கள் தண்டனை முறை..

By 
taliban

ஆப்கானிஸ்தானில் தற்போது தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இதையடுத்து ஆப்கானிஸ்தானில் சட்ட திட்டங்களையும் மாற்றியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள தலிபான்கள் 1990ம் ஆண்டுகளில் கடைபிடித்த அதே வகையான தண்டனை முறையை மீண்டும் அமல்படுத்தி உள்ளனர்.

அதன்படி ஆப்கானிஸ்தானில் குற்றவாளிகளுக்கு பொதுமக்கள் மத்தியில் கசையடி கொடுக்கும் தண்டனை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. குற்ற வழக்குகளில் சம்பந்தபட்ட 3 பெண்கள் உள்பட 12 பேருக்கு பொது இடத்தில் கசையடி கொடுக்க தலிபான்கள் முடிவு செய்தனர்.

குற்றவாளிகளுக்கு கசையடி கொடுக்கும் நிகழ்ச்சியை காண வருமாறு முஜாகிதீன் அமைப்பின் மூத்த தலைவர்கள் மற்றும் பழங்குடி தலைவர்கள், உள்ளூர் மக்கள் ஆகியோருக்கு லோகார் மாகாண கவர்னர் அலுவலகம் அறிவிப்பு விடுத்தது.

அதன்படி குற்றச் செயல்களில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 12 பேருக்கு பொது இடத்தில் கசையடி கொடுக்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் 21 கசையடி முதல் 39 கசையடி வரை கொடுக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

Share this story