22 மாதமும் 120 மாதமும் : ஓபிஎஸ் தரப்பு சாட்டையடி

marudhu113

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள தகவல்கள்  வருமாறு :

* ஈரோட்டு கிழக்கு தொகுதியில், எடப்பாடி கம்பெனி வாங்கிய ஓட்டுக்களில் பா.ஜ.க.ஓட்டு, அம்மா-எம்.ஜி.ஆர்- ஓ.பி.எஸ் ஆகியோர் மீது அபிமானம் கொண்டோரின் வாக்குகள்..

குறிப்பாக, இரட்டை இலை சின்னத்தை நேசிக்கும் கழக விசுவாசிகளது ஓட்டு.. இதை எல்லாம் கழித்து விட்டு கணக்கிட்டு பார்த்தா எடப்பாடிக்கு என்று விழுந்த ஓட்டு ஐநூறுக்கு உள்ளதான்.

* ஆறு சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய தேனி பாராளுமன்ற தொகுதியில் இருந்து ஈ.வி.கே.எஸ்ஸை விரட்டி அடிச்சது ஓ.பி.எஸ்ஸும் அவரது மகனும் என்றால்..

அந்த இத்துப் போன பீசுக்கு அறுபத்தாராயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்திலான வெற்றியை ஈரோட்டுல கொடுத்து, கைச் சின்னத்துக்கிட்ட டெபாசிட்ட காப்பாற்ற முட்டி போட்டு முழி பிதுங்கி இருக்கானுக தரைப்பாடி குரூப்..

இதுல இன்னொரு கேவலம் என்னன்னா.. காங்கிரஸ் கட்சியோட தமிழ்நாட்டு வரலாற்றுல மிக அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் பெற்ற வெற்றி இது தானாம்..இந்த லட்சணத்துல தோல்விகரமான வெற்றி என சிந்துகுமாருக்கு சிலிர்ப்பு வேறு.

* 22 மாதத்தில் சம்பாதித்த பணத்தை வைத்து தி.மு.க. ஈரோட்டு கிழக்கு வெற்றியை விலைக்கு வாங்கி விட்டது' என்கிறார் எடப்பாடி.

நீங்க 120 மாதங்கள் சம்பாதித்த பணத்தை வச்சு வெட்டி முறிக்க வேண்டியது தானே..

கொரானாவுல அடிச்சது, கொடநாட்டில் தூரு வாருனது, வேலுமணி தங்கமணி அடிச்சு குவிச்சது என எல்லாத்தையும் கொண்டு போய் அயல்நாடுகளில் பதுக்கிப்புட்டு நாடகமாடுனா மக்கள் நம்புவாங்களாக்கும்.

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். 

Share this story