மேலும் 24 குழந்தைகள் பலி : ரஷ்யா மீது, உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு

ரஷ்யா, உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரில் சிக்கி, இதுவரை 250-க்கும் அதிக குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என இம்மாத தொடக்கத்தில் ஐக்கிய நாடுகள் சபை தகவல் தெரிவித்தது.
இந்நிலையில், ரஷ்யாவின் தாக்குதலில் சிக்கி மரியுபோல் நகரின் டோநெக் பகுதியில், மேலும் 24 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யா உடனான போரில் இதுவரை 287 குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
தேடுதல் :
492 பேருக்கு கடும் காயங்கள் ஏற்பட்டுள்ளன என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கை இறுதி செய்யப்படாதவை. தற்காலிகமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளில், தேடுதல் வேட்டை இன்னும் நிறைவு செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளது.
வான்வழித் தாக்குதல் :
இதுதொடர்பாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், 'ரஷ்யாவின் தாக்குதலைத் தடுக்க உக்ரைன் படைகள் அனைத்தையும் செய்துவருகிறது.
உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு நகரங்களில் கடும் சண்டை நடைபெற்று வருகிறது.
தெற்கு பிராந்தியத்தில் உள்ள கெர்சன் நகரில் வான்வழித் தாக்குதலை தொடங்கி உள்ளோம்' என தெரிவித்தார்.
*