2G மன்மதராசா.. இந்த தேர்தலுக்குப் பிறகு, பாராளுமன்ற பாத்ரூமுக்குள்கூட நுழைய முடியாது:  நாஞ்சில் பி.சி. அன்பழகன் அதிரடி..

By 
pca

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட பீளமேடு புதூரில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சிங்காநல்லூர் தொகுதி எம்எல்ஏ கே.ஆர். ஜெயராம் தலைமை தாங்கினார். இதில், தலைமை பேச்சாளரும் திரைப்பட இயக்குனருமான நாஞ்சில் பி.சி. அன்பழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:

'உங்கள் நெஞ்சம் குழம்பக் கூடாது. எந்த கொடிய வார்த்தைகளும் உங்கள் வாயிலிருந்து வெளிவரக்கூடாது. அன்பு நிறைந்த உள்ளத்துடனும் தீய நினைவு இல்லாமலும் நன்மை செய்யும் விருப்பத்துடனும் இருங்கள்.

துன்பம் செய்ய வருபவர்களிடம் கோபமோ பகைமையோ கொல்லக்கூடாது. அன்பு நிறைந்த எண்ணங்களாலும், இதயத்தின் ஆழமான உணர்ச்சிகளாலும் அவருக்கு இடம் அளிக்க வேண்டும் என்பார் புத்தபிரான். துன்பம் செய்கிறவர்களுக்கே இன்பத்தை பரிசாக தரச் சொல்கிறார். 

கருணாநிதி, சிட்டுக்குருவி லேகிய பெரும் கொள்ளை. குடும்பத்தார்களோ..இயல்பாக சிவனேயென்று வாழ்கிறவர்களையும் வதைப்பதையே தொட்டில் பழக்கமாக்கி கொண்டவர்கள்.

பொருளாதார உயர்வோடு முதல்வர் நாற்காலியில் கருணாநிதியை நோகாமல் உட்கார வைத்த புரட்சித் தலைவருக்கு துன்ப மூட்டைகளை இறக்கி வைத்தார் கோபாலபுர கோமாளி.

கர்ணனும் செய்ய மறந்த அன்ன தர்மங்கள் மூலம் வறுமையை இல்லாது செய்த போயஸ் அன்னபூரணிக்கு எமன் வடிவில் லாரியை ஏற்றினார் பேனா - தாத்தா.

சட்டையை தனக்கு தானே கிழித்து அழுது வடிவதற்காகவே சட்டமன்றத்தை பேஷன் ஷோவாக்கிய பொம்மை ஸ்டாலினோ, கோயம்பேடு பஸ் நிலையத்தை கிளாம்பாக்கத்திற்கு தூக்கியடித்து சென்னை வரும் ஜனங்களை அலைய விட்டு பீதியேற்றி - பேதி வர வைக்கிறார்.

உதயநிதியும் - இன்ப நிதியும் மேடையேறி வரிப்பணத்தை விளம்பரங்களால் சரியாக்குகிறார்கள்.

தி.மு.க.காரர்கள் பாலாடையிலும் பாவாடை தைப்பார்கள்.

புரட்சித்தலைவர்... தர்மத்தின் தலைவன்.! கருணாநிதி குடும்பம்....கஞ்சதனத்திற்கு தாசன்கள்..!

பொன்மனச்செம்மலை கேலி பேசிய... 2G மன்மதராசாவுக்கு நீலகிரி மக்கள் இந்த தேர்தலுக்குப் பிறகு, பாராளுமன்ற பாத்ரூமுக்குள் நுழையக் கூட தகுதி தர மாட்டார்கள்.

சைக்கிள் வாங்கக் கூட தகுதியற்ற பொருளாதாரத்தைக் கொண்ட ராசாவுக்கு... காங்கிரஸ் ஆதரவோடு 2,60,000-ம் கோடிகள் எப்படி இப்பவும் குட்டி போடுகின்றது.?

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த, உள்ளாட்சியில் பெண்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு தான் சாமானிய பெண்களும் அரசியல் அதிகாரங்களை இயல்பாக பெற முடிந்தது. கரண்டி பிடித்த பெண்களும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியில் தான் கமாண்டோக்களாக துப்பாக்கி பிடித்து நெஞ்சை நிமிர்த்தி நேர் கொண்ட பார்வைகளை தர முடிந்தது.

இவ்வாறு அஇஅதிமுக தலைமை பேச்சாளரும் திரைப்பட இயக்குனருமான நாஞ்சில் பி.சி. அன்பழகன் உரையாற்றினார்.

 

Share this story