9 மாவட்ட  உள்ளாட்சித் தேர்தல் : முன்னிலை நிலவரம்..
 

By 
9th District Local Election Leading Status ..

ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஊராட்சி தலைவராகிறார் ஒரு சுயேட்சை வேட்பாளர்

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 1.00 மணி நிலவரப்படி, வெளியான  
முன்னிலை விவரம் வருமாறு :

138 மாவட்ட கவுன்சிலர், 1,375 ஒன்றிய கவுன்சிலர், 2,779 கிராம ஊராட்சித் தலைவர், 19,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு, கடந்த 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற்றது. 

இத்தேர்தலில், பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது, 74 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

இதில், 140 இடங்களுக்கான மாவட்ட கவுன்சிலர்கள் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையில், 35 இடங்களில் திமுகவும், 2 இடங்களில் அதிமுகவும் முன்னிலையில் உள்ளன.

மேலும், 1381 இடங்களுக்கான ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களில், திமுக 16 இடங்களில் வெற்றி;  அதிமுக 1, காங்கிரஸ் 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 

முன்னிலை விவரம் :

திமுக - 75

அதிமுக - 11

பாமக - 2

அமமுக - 1

பிற - 5  

9 மாவட்டங்களில் கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு, இதுவரை 159 பேர் தேர்வு பெற்று உள்ளனர். 

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 3,428 பேர் தேர்வு பெற்று உள்ளனர்.

* தென்காசி மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வாக்கு எண்ணிக்கையில், மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க. முன்னிலை பெற்றுள்ளது.

* தென்காசி ஊராட்சி ஒன்றியம் தேன்பொத்தை ஒன்றிய கவுன்சிலர் கலாநிதி திமுக 2294 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

* தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட 19-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் ஜெயா 476 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மொத்தம் பதிவான வாக்குகள் : 3,472
செல்லாதவை : 52.
ஜெயா (தி.மு.க.)  - 1,918
தீபா (அ.தி.மு.க.) - 1,442
வீரக்காள்  (அ.ம.மு.க.) - 48
நாச்சியம்மாள் (நாம் தமிழர்) - 12

வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் ராமசுப்ரமணியன் வழங்கினார்.

* தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம் 3-வது வார்டில் மதிமுக வேட்பாளர்  சங்கீதா வெற்றி பெற்றுள்ளார

மொத்த வாக்கு - 3457
சங்கீதா,ம.தி.மு.க. - 2419
சீதாலெட்சுமி,பா.ஜ.க. - 1065
வித்தியாசம் - 1354

மதிமுக வேட்பாளர் சங்கீதா 1354 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

* திருவண்ணாமலை ஆரணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அக்ராபாளையம் கிராமத்தில் நடந்த ஊராட்சி மன்ற தலைவர் இடை தேர்தலில், திமுக வேட்பாளர் தாட்சாயிணி அன்பழகன் வெற்றி பெற்றுள்ளார்.

தி.மு.க. வேட்பாளர் தாட்சாயிணி அன்பழகன் - 1608,  பா.ம.க.வேட்பாளர் ஜெயேந்திரன் - 795

813 வாக்குகள் அதிகம் பெற்று தி.மு.க.வை சேர்ந்த தாட்சாயிணி அன்பழகன் வெற்றி பெற்றார்.

* கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஒன்றியத்தில், 2-வது வார்டில் சண்முகம், 3-வது வார்டில் தமிழரசி சாமிநாதன் ஆகிய திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

* நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம்  ஒன்றியம் 7-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் ராமலட்சுமி வெற்றி பெற்று உள்ளார்.

* நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி ஒன்றியம் 2-வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 238 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Share this story