கரன்சியை நம்பி அலையும் சில அரசியல் கழுதைகள் திருந்துக : மருது அழகுராஜ் 

By 
marudhu24

முத்துராமலிங்க தேவரின் 115-வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, பசும்பொன் தேவர் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில், பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்திய பின், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சமீபத்தில், தேவர் தங்க கவாசம் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கிய தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது. அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் நான் தான். அதிமுக சார்பிலேயே வெள்ளிக்கவசத்தை வழங்கி உள்ளேன்.

வெள்ளிக்கவசம் 10.4 கிலோ எடை கொண்டது. ஒன்றரை கோடி தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தான், தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன் என தெரிவித்தார். 

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக செய்தித் தொடர்பாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள குறியீட்டுக் கவிதை வருமாறு :

* கடவுளர்
சிற்பங்களை
செதுக்கும்

சிற்பியின்
வீட்டு
வாசலில்

வந்து நின்ற
கழுதை..

ஏதாவது
வேலை
தாருங்கள்..
என்றது..

 * சிற்பியோ
பொதி
சுமக்கும்

உனக்கு
ஏற்ற
வேலை

இங்கு
ஏதுமில்லை
என்றார்...

கொஞ்சம்
கருணை
காட்டுங்கள்..
என்றது..

சரி..

அருகில்
உள்ள
குளத்தில்
போய்

அழுக்குத்
தேய்த்து
குளித்துவிட்டு
வா 

உனக்கு
ஒரு
வேலை தருகிறேன்

என்றார் 
சிற்பி..

* கழுதையும்
வைக்கோலை
தேய்த்து

குளித்துவிட்டு
பளிச் என்று
வந்து நிற்க..

அருகில்
உள்ள
ஊருக்கு

கொண்டு
சேர்க்க
வேண்டிய

அம்மன்
சிலை
ஒன்றை 

கழுதை
முதுகின் மீது
வைத்து

கயிற்றால்
கட்டி விட்டு

நீ முன்னாடி 
நட

நான் உன்
பின்னாடி
வருகிறேன்
என்றார் சிற்பி..

* அவ்வாறே

அம்மன்
சிலையை
சுமந்து
கொண்டு 

கழுதை
புறப்பட்டது..

அதன்

பின்னே
சிற்பியும்
தொடர..

போகிற
வழியில்

எதிரே
வந்த
ஆண்களும்
பெண்களும் 

அம்மன்
சிலை
சுமந்து வரும்

கழுதையை
நோக்கி

கும்பிடு ஒன்றை

போட்டு விட்டு
பவ்வியமாக 
கடந்து போக .

கழுதைக்கு
கர்வம்
ஏறியது...

சிற்பியை
பார்த்து
சொன்னது..

பார்த்தாயா
எனக்கு
இருக்கும்
மரியாதையை

என்னை
கும்பிடாமல்

ஒரு பயலும்
என்னைக்
கடந்துபோக முடியாது.
பார்த்தாயா..

என்றது
கழுதை..

உடனே
சிற்பியும்

உண்மை
தான்
கழுதையாரே

உங்களுக்கு
ஊரில்
இவ்வளவு 

செல்வாக்கு
இருக்கும் என

நான் நினைத்து
கூட

பார்க்கவில்லை ..

ஏன்று
சிரித்தவாரே
சிற்பி
சொல்ல....

சிலையை
இறக்கி
வைக்கும்
இடம் வந்தது

அம்மனை
இறக்கி
அங்கிருந்த

ஆலயத்தில்
வைத்து விட்டு

ஊரார்கள்
கொடுத்த
பணத்தில்

கழுதைக்கு
பத்து
வாழைப் பழங்களை
வாங்கி

கூலியாக
கொடுத்து
விட்டு

நீ போகலாம்
என்றார்..

போன வழியிலேயே
கழுதை

ஊருக்கு
திரும்ப..

இப்போது

வரும்
வழியெங்கும்

எதிரே
வந்த
எல்லோரும்

ச்சீ தள்ளி
போ
என்று

கல்லெடுத்து
அடிக்க வர..

கழுதைக்கு
ஒரே
குழப்பம்..

போகும் போது
கை எடுத்து
கும்பிட்டவன்
எல்லாம்

இப்ப

திரும்பி
வரும் போது

மரியாதை
துளியும்
தராமல்

கையில்
கிடைத்ததை
எடுத்து கொண்டு

விரட்டுவது ஏன்
என்று

கவலை
கொண்ட
கழுதை

காரணத்தை
கேட்க

சிற்பி
சொன்னார்..

போகும்
போது
உன் முதுகின்

அம்மன்
சிலை
இருந்தது

அதனால்
வழியில்
பார்த்த

மக்கள்
எல்லாம்
வணங்கிச்
சென்றனர்..

உன் முதுகின்
மீது இருந்த

தெய்வத்தை
நோக்கி வந்த
மரியாதை
எல்லாம்

மக்கள் 
உனக்கு
தருவதாக

மனக் கணக்கு
போட்டு
கொண்டு 

மமதை
ஏறிய நீ

வேலை கொடுத்த
என்னிடமே

வியாக்யானம்
பேசினாய்..

என்று சிற்பி
சொல்ல ..

கழுதைக்கு
நிஜம்
புரிந்தது..

முதுகின்
மீது

இப்போது
பொதி இல்லாமலேயே..

உரைத்த
உண்மையில்
கழுதைக்கு 

சுமை
கனத்தது...

* ஆம் மேற்படி

கர்வம்
பிடித்த
கழுதை போல 

மக்களே
அடித்து
திருத்தி

ஆணவம்
ஒடுக்கி

உணர்த்த
வேண்டிய
அவசியம் 

கரன்சியை
நம்பி அலையும் 

சில
அரசியல்
கழுதைகளுக்கும்

அவசியம்
ஆகிறது..

இதனை

தென் திசை
தொடங்கி
விட்டது.

விரைவில்
அது

திக்கெட்டும்
பரவத்தான்
போகிறது...
-- இவ்வாறு அதிமுக செய்தித் தொடர்பாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதிமுக செய்தித் தொடர்பாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

Share this story