அமாவாசை நாளில் வந்த ஓர் அரிய கனவு : மருது அழகுராஜ்

rty

மூத்த பத்திரிகையாளர்,  கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள குறியீட்டுக் கதை வருமாறு :

*எறும்புகளின்
உழைப்பில்
உருவான

அழகிய
புற்றுக்குள்

ஒரே ஒரு
முறை
சுற்றிப்பார்க்க

அனுமதி
கேட்டது
கட்டுவிரியன்..

சூதுவாது
அறியாத எறும்புகள்

கட்டுவிரியன்
திட்டம்
தெரியாமல்

ஒரு முறை
சுற்றிப்பார்க்க
தானே..என

வெள்ளந்தி
எறும்புகள்

அதற்கு
ஒப்புக் கொண்டன.

புற்றுக்குள்
போன
கட்டுவிரியன்

எறும்புகள்
உழைப்பில்
கட்டப்பட்ட

புற்றின் அழகு
நேர்த்தி

இவற்றில்
சொக்கிப் போனது..

எறும்புகளை
கூப்பிட்டு

இனி இந்த
புற்று
எனக்கே
சொந்தம்..

நீங்கள்
வேறு புற்று

கட்டிக் கொள்ளுங்கள்

மீறினால்

விஷத்தை
பாய்ச்சி
விடுவேன்..

என கட்டுவிரியன்
கர்வம்
கொப்பளிக்க..

கலங்கி
நின்ற
எறும்புகள்.

அருகிலிருந்த
முனிவர்
ஒருவரிடம்
முறையிட்டன...

கட்டுவிரியனை
அழைத்த
முனிவர்...

முறையற்ற
செயல் இது

அடுத்தவர்
உழைப்பில்
உருவானதை

அபகரிக்க
முயல்வது

அடுக்காத
செயல் என

அறிவுரைகள்
சொல்ல..

அதெல்லாம்
முடியாது என

கட்டுவிரியன்
கறாராக
பேசியது..

எறும்புகளை
அழைத்த
முனிவர்

தர்மத்தை
மீறும்

கட்டு
விரியனுக்கு

நல்ல பாடம்
கிடைக்கும்

நவம்பர்
வரை

பொறுத்து
இருங்கள்
என்று சொல்ல

அதனை

எற்ற 
எறும்புகள்

வரம்புமீறா
வண்ணம்

அருகில்
ஒரு
குடில் அமைத்து

பொறுமை
காத்தன...

ஒரு நாள்..

கட்டு
விரியனின்
குட்டிகள்
கதறின..

எறும்புகள்
ஓடிச் சென்று

என்னவென்று
பார்க்க

ராட்சஷ
பருந்து ஒன்று

கட்டுவிரியனை
கொத்தியவாறு

வானத்தில்
பறக்க..

பின்னோடி
சென்ற

கட்டுவிரியன்
குட்டிகள்

பிதற்றி
அழுது துடித்தன

கழுகின்
காலில் இருந்து

நழுவிய
கட்டுவிரியன்

முனிவர்
குடில்
வாசலில்

தொப்பென்று
விழுந்து
துடித்தது,

உயிருக்கு
போராடிய
கட்டுவிரியன்

முனிவரிடம்
கெஞ்சியது...

என்னையும்
என்
குட்டிகளையும்

காப்பாற்றி
உதவுங்கள்..
என மன்றாடியது..

*முனிவர்
சொன்னார்..

உனக்கு
நல்லதை
சொன்னேன்

நவம்பர்
வரை
அவகாசம்
தந்தேன்..

ஆனால்

கர்வம்
கொண்ட
சர்ப்பம் 
உன்னிடம்

திருந்தும்
அறிகுறி
மருந்துக்கும்
இல்லை..

உனது
அபகரிப்பு
வெறி

துளியும்
அடங்கவில்லை.

என்ன
செய்வது..

வலியவன்
என
நினைத்து
கொண்டு..

எளியோரை
வதைக்க
முனைந்தால்

அந்த

வலியவனை
அழிக்க

காலம்
அவனிலும்
வலியவனை

உருவாக்கி
அழிக்கும்
என்பது

உனக்கு
உணர்த்தப்
பட்டுள்ளது

அதனை

கட்டுவிரியனே

பருந்தின்
விருந்தில்

பார்த்து
இருப்பாயே
என்ற முனிவர்..

மனவருந்தி
திருந்தினால்

மருந்து
தருகிறேன்..

தருமத்தின்
வழி நடக்கும்

உத்தம
எறும்புகளின்
புற்றை

ஒப்படைத்து
விட்டு

உயிர் தப்பித்து
கொள்..

உரக்கச்
சொன்ன
முனிவர்..

இப்போதும்
உனக்கு

இன்னொரு
வாய்ப்பாக

அக்டோபர்
முப்பது வரை

அவகாசம்
தருகிறேன்..

அந் நாள்

உனது

அருவருப்பு
அபகரிப்பை

உனக்கே
உணர்த்தும்..

அதன்..
பிறகும்

உன்
நடத்தை

நன்னடத்தை
ஆகாதெனில்

நவம்பர்
திங்கள்

உன்
இடத்தை
முடித்து விடும்..

என
முனிவர்
சாபமிட்டு
முடிக்க..

திடுக்கிட்டு
விழித்தேன்..

அதிகாலை
கனவு..

அதுவும்

அமாவாசை
நாளில்..

இவ்வாறு கவிஞர் மருது அழகுராஜ் குறிப்பிட்டுள்ளார்.

*

Share this story