அதிமுக சதுரங்கம் : அரவணைக்கும் தலைமைக்குணம்; செல்வத்துள் செல்வம் யார்?

marudhu45

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் இச்சூழலில், அரசியல் சதுரங்கம் யாவரும் அறிந்ததே.

இந்நிலையில், பிளவுபட்டு நிற்கும் பேரியக்கமாம் அதிமுக நிலை என்ன? எதிர்காலம் என்ன? என்பது மதிற் மேல் பூனையாய்ப் போனதோ?

இருப்பினும், உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை; பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை என மருதகாசி வரிகளில், புரட்சித்தலைவர் அண்ணா திமுக உரிமையாளர் எம்ஜிஆர் முழங்கியதுபோல, கட்சியை 35 ஆண்டுகளாய் சிங்கமாய் நிமிர வைத்து, கட்டிக்காத்த, தனி மனித இராணுவம் புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதா போல இனி யார் வருவார்.?

இதில், ஜெ ஜெயலலிதாவினால் நம்பகத்தன்மை பெற்று, அங்கீகாரம் பெற்றவர், முதலமைச்சராய் பொறுப்பேற்றவர் ஓபிஎஸ் என்பதும் யாவரும் அறிந்ததே..

இந்நிலையில், தற்போது அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளரும், செய்தித் தொடர்பாளருமான கவிஞர் மருது அழகுராஜ், ஓபிஎஸ் குறித்தும், ஒன்றரைக்கோடி தொண்டர்களுக்கு நினைவுறுத்தியும் வெளியிட்டுள்ள கவிதைச்செய்தி வருமாறு :

* நெளிவு 
சுளிவு

நேர்மை 
வழி
தெளிவு..

பதறாத பண்பு,
பண்பட்ட அன்பு..

குன்றாத
விசுவாசம்..

குறிக்கோளை
வென்றெடுக்கும்..
வியூகம்

* ஆயிரம்
நரிகள்
ஊளையிட்டு
அரற்றினாலும்

அஞ்சாது
எதிர்கொள்ளும்

ஆண்மைத்
திடம்..

அரவணைக்கும்
தலைமைக்
குணம் .. 

இன்முகம் மாறா
புன்னகை..

இயலார்க்கு
இரங்கும்
ஈகை..

எதிர்ப்பை
களைக்க விட்டு

எதிர் தாக்குதல்
தொடுக்கும் 
பக்குவம்..

எதிர்க் கருத்து 
கொண்டவரையும்

மதிக்கும்
தத்துவம்.

* ஆம்..

செல்வத்துள்
செல்வம்

எங்கள் 
பன்னீர்செல்வம்

அவரே,

கழகத்திற்கு
காவியத் 
தாய்

அருளிய
செல்வத்துள்
எல்லாம் 
தலை..

என்பதே

ஒன்றரைக் கோடி
தொண்டர்கள்
உச்சரிக்கும்

உளமார்ந்த 
குரல்
அன்றோ..

இவ்வாறு அதிமுக செய்தித்தொடர்பாளர்  கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

Share this story