அதிமுக பொதுக்குழு சட்டப்படி செல்லாது : சசிகலா

sasi4

சசிகலா செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது : 

இன்றைய நிகழ்வுகளை பார்க்கும்போது, அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் ஒன்று சேரும் நேரம் வந்துவிட்டது. தலைமை பதவியை அடித்துப் பிடிக்க நினைத்தால் அது நிலைக்காது. 

பணம் அதிகாரம் வைத்து அடைந்த எந்தப் பதவியும் நிலைக்காது. சட்டப்படி செல்லாது. 

நிழலுக்காக சண்டையிட்டு, நிஜத்தை இழந்து விடக்கூடாது. 

ஒட்டுமொத்த தொண்டர்களின் ஆதரவோடு, நிஜத்தை நிச்சயம் அடைவோம். ஒன்றரை கோடி தொண்டர்களும், பொதுமக்களும் என்னைதான் ஆதரிக்கிறார்கள். பொதுக்குழுவில் நிதிநிலை அறிக்கைகளை அறிவிக்க முடியாது. 

அப்படி இருக்கையில், இது எப்படி பொதுக்குழுவை ஏற்றுக்கொள்ள முடியும். அ.தி.மு.க. பொதுக்குழு நடந்ததே செல்லாது' என்றார்.
*

Share this story