பாராளுமன்ற தேர்தலில் அதிமுக மெகா கூட்டணி : எடப்பாடி பழனிசாமி பேச்சு 

epsspeech

நாமக்கல்லில் பொம்மைக்குட்டைமேட்டில் அதிமுக பொன்விழா ஆண்டு நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி  பழனிசாமி பொதுமக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

அதிமுகவை முடக்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறவில்லை. அதிமுகவில் பி டீம் ஒன்றை உருவாக்கி பிளவை ஏற்படுத்தி திமுக நினைக்கிறது. அதிமுக உடையவில்லை ஒன்றாக இருக்கிறது என்பதை நாமக்கல் பொதுக்கூட்டம் காட்டுகிறது.

எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனை தவிடு பொடியாக்கி மீண்டும் ஆட்சியமைப்போம்.

பாராளுமன்ற தேர்தலில் அதிமுக மெகா கூட்டணி அமைத்து அமோக வெற்றி பெறும். அரசியல் ரீதியாக நம்மை எதிர்கொள்ள முடியாத திமுக கொல்லைப்புறமாக வந்து செயல்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Share this story