தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை ஏற்க, அதிமுக மறுப்பு..
 

By 
aiadmk

உள்நாட்டில் பல்வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து வசித்து வருவோர் தங்களது சொந்த மாநில தேர்தல்களில் வாக்களிப்பதற்கு வசதியாக மார்க்-3 என்கிற மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை பயன்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டத்துக்கு தமிழக தேர்தல் அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த கூட்டம் ஜனவரி 16-ந்தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

அந்த வகையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியான சத்யபிரதா சாகு அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கும் கடிதம் அனுப்பி இருந்தார். அதில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என குறிப்பிடப்பட்டு இருந்தது.

அ.தி.மு.க.வில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு அனுப்பப்பட்ட கடிதத்தை அ.தி.மு.க. தலைமை கழகம் ஏற்க மறுத்துள்ளது. தலைமை கழக நிர்வாகிகள் அதனை வாங்காமல் திருப்பி அனுப்பி உள்ளனர்.

Share this story