ஜனாதிபதி தேர்தலில், அதிமுகவின் ஆதரவு : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

eps3

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் 6.8.2022 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு,

பா.ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெகதீப் தன்கருக்கு அ.தி.மு.க.வின் ஆதரவு கோரி, அக்கட்சியின் மூத்த தலைவரும் மத்திய மந்திரியுமான ராஜ்நாத் சிங் என்னிடம் தொலைபேசி மூலம் கேட்டுக் கொண்டார். 

அதன்படி, கழக மூத்த நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்ததன் பேரில், துணை ஜனாதிபதி பதவிக்கு பா.ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெகதீப் தன்கருக்கு அ.தி.மு.க. தனது முழு ஆதரவை அளிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்' என அவர் கூறியுள்ளார்.
*

Share this story