முதல்வர் கோப்பைக்கு ரூ.47 கோடி ஒதுக்கீடு :  அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து..

udhaya3

தமிழக அமைச்சரவையில் 35-வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து, உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மேலும், சிறப்பு திட்டங்கள் செயலாக்கம், வறுமை ஒழிப்பு, கிராமப்புற கடன் திட்டத்துறையும் உதயநிதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தலைமைச் செயலகத்தில் உள்ள அறைக்கு வெளியே, துறையுடன் அமைச்சர் உதயநிதி பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, தலைமை செயலகத்தில் தனது அறைக்கு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் துரைமுருகன் இருக்கையில் அமர வைத்தார். இருக்கையில் அமர்ந்து அதிகாரப்பூர்வமாக தனது அலுவலக பொறுப்பை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார். பின்னர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோப்புகளில் கையெழுத்திட்டார்.

அமைச்சராக பொறுப்பேற்ற பின் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் கோப்பைக்கு ரூ.47 கோடி ஒதுக்கீடு செய்து தனது முதல் கோப்பில் கையெழுத்திட்டார். பின்னர், வயது முதிர்ந்த விளையாட்டு வீரர்கள் 9 பேருக்கு தலா ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்க கையெழுத்திட்டார்.

இதற்கிடையே, மூத்த அமைச்சர்கள் புதிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Share this story