ஆந்திரா : சந்திரபாபு நாயுடு பிரச்சார நிகழ்ச்சியில், 8 பேர் பலி..
Thu, 29 Dec 2022

முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கடந்த சில நாட்களாக ஆளும் ஜெகன்மோகன் ரெட்டியின் அரசுக்கு எதிராக அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், ஆந்திராவின் கந்துகுருவில் அவரை வரவேற்க ஆயிரக்கணக்கானோர் கூடியதால் அந்த நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் தெலுங்கு தேசம் கட்சியினர் என கூறப்படும் 7 பேர் உயிரிழந்தனர்.
மேலும் பலர் காயமடைந்ததாகவும், சிலர் படுகாயமடைந்ததாகவும் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்தார். அத்துடன், காயமடைந்தோரை மருத்துவமனையில் நேரில் சென்று சந்திரபாபு நாயுடு ஆறுதல் தெரிவித்தார்.