அண்ணா திமுக நெறி..யும், நரி..யும் : மருது அழகுராஜ் விமர்சனம்

marudhu82

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில்.. ஓபிஎஸ், ஈபிஎஸ் குறித்து, அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள கவிதைச் செய்தி வருமாறு :

* குயிலுக்கும்
காகத்துக்கும்
குறித்த நிறம்
ஒன்று தான்..

ஒன்றின்
குரல்
இனிக்கிறது

மற்றொன்றின்
குரலோ
இம்சிக்கிறது..

* கழுதைக்கும்
குதிரைக்கும்

காணும் தோற்றம்
ஒன்று தான்..

ஒன்று,
பொதி
சுமக்கிறது

மற்றொன்று,
போர் வீரனை
சுமக்கிறது..

* புலிக்கும்
பூனைக்கும்
பொருந்தும் தோற்றம்
ஒன்று தான்..

ஒன்றை
பார்த்து
ஊரே ஒடுங்குது..

இன்னொன்று
கண்டு,
எலி மட்டுமே
நடுங்குது..

* நரிக்கும்
நாய்க்கும்

காணும் தோற்றம்
ஒன்று தான்..

ஒன்று
விசுவாசத்தின்
அடையாளம்..

மற்றொன்று,
சூழ்ச்சி செய்யும்
அவமானம்..

அதுபோலத்தான்,

ஒரு வாக்கில்
இருவரும்
உருவானவர்
என்றாலும் 

ஒருவர்,
ஒற்றுமைக்கு
பாடுபடுகிறார்

மற்றொருவர்,
குத்துக் கோல் போலவே
கூறுபோட
படாதபாடு
பாடுகிறார்..

* ஆம்..

ஓ.பி.எஸ்-
கட்டிச் சேர்க்கும்
கயிறு..

இ.பி.எஸ்-
வெட்டிப்
பிளக்கும்
கோடாரி..

ஓ.பி.எஸ்,
நெறி பிறழாதவர்

ஈ.பி.எஸ்,
நரி பிறப்பானவர்

* ஓ.பி.எஸ்-
அம்மா காட்டிய
அடையாளம்..

ஈ.பி.எஸ்-
அண்ணா திமுகவின்
அவமானம்..

* ஆக...

ஒன்றரைக் கோடி
தொண்டரும்
ஒரு நிமிடம்
யோசிப்போம்

ஓ.பி.எஸ்ஸிடம்
கழகம் சேர்ந்திட 
உளமார
பிரார்த்திப்போம்..

பொல்லாத எடப்பாடி
இல்லாத கழகம்..

பொன்விழா இயக்கத்து
போர்க்கோல சபதம்..

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
 

Share this story