ஈரோடு தொகுதியில், அண்ணாமலை போட்டி?

erodubjp

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட பா.ஜனதாவும் தீவிரமாக உள்ளது. சின்னம் பிரச்சினையால் அ.தி.மு.க.வும், த.மா.கா.வும் போட்டியிட தயங்கினால் பா.ஜனதா களம் இறங்க திட்டமிட்டுள்ளது.

நேற்று டெல்லியில் அமித்ஷாவை சத்தித்தபோது இதுதொடர்பாக விவாதித்து இருக்கிறார்கள். இடைத்தேர்தலில் பா.ஜனதா தலைவர் அண்ணாமலையை போட்டியிட வைத்து சட்டசபைக்கு அனுப்பினால் பா.ஜனதா குரல் ஓங்கி ஒலிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

இதுபற்றி அண்ணாமலையிடம் கேட்டபோது, கட்சி தலைமை தெரிவித்தால் போட்டியிட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் ஆர்.இளங்கோ போட்டியிட்டார்.

அந்த தேர்தலில் அண்ணாமலை 68 ஆயிரத்து 553 ஓட்டுகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்த தேர்தலில் அண்ணாமலை களம் இறங்கினால் பா.ஜனதாவுக்கும் காங்கிரசுக்கும் நேரடி போட்டி ஏற்படும்.

Share this story