மத்திய அரசின் கேள்விகளுக்கு பதில் தயார் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

By 
neet4

சென்னை, அரசு ஸ்டான்லி மருத்துவமனை கல்லூரியில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் தேசிய ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். 

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

நீட் மசோதா நிறைவேற்றப்பட்டதில் சட்ட மன்றத்திற்கு உள்ள அதிகாரம் என்ன, இது ஒன்றிய அரசின் அதிகார வரம்புக்குள் வருகிறதா, தேசிய ஆணைய சட்டத்திற்கு அது உட்பட்டதா? முரண்பட்டு அமைந்துள்ளதா? 

நீட் தேர்வு தகுதி அடிப்படையிலான தேர்வு எனவும் தரமான கல்வி, இது வெளிப்படையான தன்மை, தேசிய தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வு ஆகிய வரலாற்று சீர்திருத்தங்களை உள்ளடக்கி உள்ளது எனவும் அதற்கு இந்த மசோதா பாதிப்பை ஏற்படுத்துமா என்றும் கேட்டுள்ளது. 

இது நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படுத்துமா, இந்திய அரசியல் சட்டத்தை மீறுகிறதா, தேசிய கல்வி கொள்கைக்கு முரணானதா என்றும் விளக்கங்கள் கோரி உள்ளது. 

இத்தகைய குறிப்புகள் மாணவர்களுககு எதிரானது, எந்த விதத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது, 

இவற்றை எல்லாம் ஆராய்ந்து பதில் அளிக்கும் வகையில் சுப்ரீம் கோர்ட்டின் மூத்த வக்கீல்களை கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. 

மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை சுட்டி காட்டியுள்ளோம். ஒன்றிய அரசு கேட்டுள்ள கேள்விகளுக்கு விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. 

ஓரிரு நாட்களில் முதல்-அமைச்சருக்கு அந்த அறிக்கை அனுப்பப்பட்டு அவரின் ஒப்புதல் பெறப்பட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பப்படும். 

நீட் தேர்வு விலக்கு பெறுவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. அந்த நிலைப்பாட்டில் இருந்து விலகவில்லை. விட்டு கொடுக்கவும் இல்லை. சட்ட ரீதியாக பதில் தயாரிக்கப்பட்டு உள்ளன. 

இதன் மூலம் தமிழக மாணவர்கள் நலன் காக்கப்படும். நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதில் பின்னடைவு ஏற்படாமல் கவனமாக இருக்கிறோம். 

சட்டப்பூர்வமான கோப்புகளுக்கு பதில் தயாரித்து இருக்கிறோம்' என்றார்.
*

Share this story