ஒன்றுபட்ட அதிமுகவை எந்த கட்சியும் அங்கீகாரம் செய்யும் : ஓபிஎஸ் தரப்பு திட்டவட்டம்

opsspeech

நாமக்கல்லில், பொம்மைக்குட்டைமேட்டில் நடைபெற்ற கூட்டத்தில் இன்று பேசிய எடப்பாடி பழனிசாமி, ' பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக மெகா கூட்டணி அமைத்து அமோக வெற்றி பெறும்' என்றார்.

இந்நிலையில் இது தொடர்பாக, அதிமுக செய்தித் தொடர்பாளர் கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஓ.பி.எஸ் தலைமையிலான ஒன்றுபட்ட அண்ணா திமுக தான் வென்று காட்டும்' என உறுதிபட விளக்கியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

ஓட்டை வீட்டில் குடியேற ஒரு பயலும் வரமாட்டான்.

ஒன்றுபட்ட அண்ணா தி.மு.க.வை மட்டுமே, பா.ஜ.க.உட்பட எந்த கட்சியும் அங்கீகாரம் செய்யும்.

எனவே, கட்சியையும் பிளவுபடுத்திக்கொண்டு, கூட்டணிக் கட்சிகளையும் தக்க வைக்காத நிலையில், எடப்பாடி அமைப்பது மெகா கூட்டணியாக இருக்காது; அது அரசியல் அறியாத மெண்டல்களின் கூடாரமாகதான் இருக்கும்.. 

அதே சமயம், இடி அமீன் எடப்பாடி இல்லாத பூத்துக் குலுங்கும் பசுமைத் தோட்டமாக அண்ணா தி.மு.க. ஓ.பி.எஸ் தலைமையில் உருவாகும்.

பச்சிலையாம் இரட்டை இலை  சின்னம் உட்பட்ட, அனைத்து உரிமைகளோடு 

பிரிந்து ஒதுங்கிக் கிடக்கும் அ.தி.மு.க வின் ஒட்டுமொத்த சக்திகளும் ஒன்றாகும் நிலை உருவாகும்.

பதறாத பண்பாளர் ஓ.பி.எஸ் தலைமையிலான அந்த ஒன்றுபட்ட அண்ணா திமுக தான் வென்று காட்டும்.

இந்த அரசியல் புரட்சியையும், அண்ணா திமுகவுக்கான அரசியல் மறுமலர்ச்சியையும், மக்கள் ஆதரவோடு கழகத்தின் உயிர்மூச்சான தொண்டர்கள் நடத்திக் காட்டுவார்கள்..இது சத்தியம்.

இவ்வாறு அதிமுக செய்தித் தொடர்பாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
*

Share this story