பா.ஜ.க. தனித்துப் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிக்கும் : அமித்ஷா உறுதி 

amitshah7

கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் இணைந்து பா.ஜ.க. கூட்டணி அமைக்கப் போவதாக வதந்திகளை பரப்பி வருகின்றனர். கர்நாடகாவில் பா.ஜ.க. தனித்துப் போட்டியிடும்.

மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் கர்நாடாகாவில் ஆட்சி அமைக்கும் என்பதை நான் தெளிவாக கூற விரும்புகிறேன். காங்கிரஸைப் பொறுத்தவரை, அதிகாரத்தைப் பெறுவது ஊழல் செய்வதற்கான ஒரு வழியாகும். ஆனால் எங்களைப் பொறுத்தவரை அது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதாகும்.

சமீபத்தில் நடந்த 7 மாநில தேர்தல்களில் 5 மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. ஆனால் 6 மாநிலங்களில் காங்கிரஸ் சரிவை சந்தித்துள்ளது என குறிப்பிட்டார்.

Share this story