'இடி அமீன்' எடப்பாடியின் தரங்கெட்ட செயல்பாடுகள் : ஓபிஎஸ் தரப்பு கடும் கண்டனம்

பதவிப் பித்தர் எடப்பாடி, தான் ஒரு " இடி அமீன்" தான் என்பதை, தரங்கெட்ட செயல்பாடுகளால் உறுதி செய்திருக்கிறார் என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக செய்தித் தொடர்பாளருமான கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :
அம்மாவுக்கான நிரந்தர பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்து விட்டேன் என, கடந்த மாதத்தில் ஆணவம் கொப்பளித்த பதவிப் பித்தர் எடப்பாடி.. இப்போது, தலைமைக் கழகத்தில் உள்ள அம்மாவின் அலுவலக அறையையும் இடிக்க உத்தரவிட்டிருப்பதன் மூலம், தான் ஒரு " இடி அமீன்" தான் என்பதை
அவர் உறுதி செய்திருக்கிறார்
ஏற்கனவே, அம்மா வாழ்ந்த போயஸ் தோட்டத்து வீட்டை, நினைவு இல்லமாக மாற்றுவதை திட்டமிட்டு தவிர்த்ததும்., அம்மா பெரிதும் நேசித்த கொடநாட்டில் நடந்த கொலை கொள்ளை விகாரங்களை மூடி மறைக்க முயன்றதும் எடப்பாடியே என்னும் நிலையில்..
அம்மாவின் நினைவுச் சுவடுகளை தடயம் இல்லாமல் அழிக்கும் முயற்சியில், மீண்டும் மீண்டும் எடப்பாடி ஈடுபட்டு வருகிறார்..
இதற்கெல்லாம் காரணம்..ஓ.பி.எஸ்ஸை மட்டுமல்ல,
அவரை முதல் அமைச்சராக்கி தனது அரசியல் வாரிசு என உலகிற்கு அடையாளம் காட்டிய புரட்சித் தலைவி அம்மா மீதும், அவர் கொண்டிருக்கும் வன்மமே என்பது தெளிவாகி விட்டது.
இப்படியாக..மகுடத்துக்கு அலைகிற மனநோயாளி எடப்பாடியின் இத்தகைய தரங்கெட்ட செயல்பாடுகள்.., அம்மாவை தெய்வமாக நேசிக்கும் கோடான கோடி தொண்டர்களை கொதிப்படைய வைத்திருக்கிறது..
இதனை உணர்ந்து, எடப்பாடியும் அவரது கரன்சிக்கு துணைபோகும் எடுபிடிகளும் தங்களை திருத்திக் கொள்வது உத்தமம்.
இல்லையேல், விளைவுகள் விபரீதமாகும்..
இவ்வாறு அதிமுக செய்தித் தொடர்பாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
*