பர்பிசாமி கும்பலுக்கு பலமான விருந்து காத்துக்கிட்டு இருக்கு : ஓபிஎஸ் தரப்பு விளாசல்

எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள அரசியல் நிலைப்பாடு தொடர்பாக, பல்வேறு கேள்விக்கணைகள் தொடுத்து, கட்சியின் நலன் கருதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள கவிதைச்செய்தி வருமாறு :
* ஒன்றரை
சதவீத
ஆதரவு தான்
ஓ.பி.எஸ்.க்கு
இருக்கு
ஓட்டையன்,
அதாங்க
செங்குத்து
ஓட்டையன்
செப்புகிறார்..
எங்கே
எடுத்தாராம்
கணக்கு..
தொண்டர்களை
சந்தித்து
சேகரித்த
விபரத்தை
விளக்கு..
* எதற்காக
எடுபிடிசாமி
பசும் பொன்
வரலை..
பச்சிலையாம்
ரெட்டை இலை
சின்னம்
பெற்றுத் தந்த
மாயத் தேவர்
மரணத்துக்கு
வரலை..
உண்மை
காரணத்தை
ஒவ்வொன்றா
எடுத்து
அடுக்கு..
தொண்டரை
சந்திக்க
தொடைநடுங்கி
கோழையாகி
கூடுதல்
பாதுகாப்பு
கேட்டது
எதுக்கு...
* ஒன்றரை
சதவீதமா..
ஒன்றரை
கோடி
தொண்டர்களும்
சாதகமா
என்பதை
பெட்டி
வைத்து
பார்க்காமல்
தவழ்ந்தசாமி
கம்பெனி
பம்முவது
சிரிப்பு..
தேர்தல்
வரட்டும்
பங்காளி..
பர்பிசாமி
கும்பலுக்கு
பலமான
விருந்து
காத்துக்கிட்டு
இருக்கு..
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.