தீரன் சின்னமலை சிலைக்கு, முதல்வர் ஸ்டாலின் மரியாதை
 

cm4

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாளையொட்டி, சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சித்தலைவர்கள், சமுதாய தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்த உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அவருடன் அமைச்சர்கள் சக்கரபாணி, முத்துசாமி, கண்ணப்பன், வெள்ளக் கோயில் சாமிநாதன், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., ஈசுவரன் எம்.எல்.ஏ., மேயர் ஆர்.பிரியா மற்றும் முக்கிய பிரமுகர்கள், செய்தித்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

அ.தி.மு.க. சார்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தீரன் சின்ன மலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அவருடன் தம்பிதுரை, பா.வளர்மதி ஜெயக்குமார், மாவட்ட செயலாளர்கள் சத்யா, விருகை ரவி, வெங்க டேஷ்பாபு, கே.பி.கந்தன், பரங்கிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், துரைப்பாக்கம் டி.சி.கோவிந்தசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

த.மா.கா. சார்பில் மாநில தலைவர் ஜி.கே.வாசன் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன், முனவர் பாட்சா, இலக்கிய அணி செயலாளர் கே.ஆர்.டி. ரமேஷ், சைதை நாகராஜன், கோவிந்தசாமி, ராணிகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சமத்துவ மக்கள் கழக நிறுவனத்தலைவர் எர்ணாவூர் நாராயணன் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

உடன் தலைமை நிலையச் செயலாளர் தங்கமுத்து, ஆர்.கே நகர் பகுதி செயலாளர் ராஜேஷ், மற்றும் வடசென்னை மாவட்ட நிர்வாகிகள் சங்கர பாண்டியன், சதீஷ் செல்வா, உள்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.

Share this story