சென்னை, காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கோஷ்டி மோதல் : ரத்தம் வழிந்தது, போலீஸ் வருகை..

sathyamurthi

சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில்  கோஷ்டி மோதல் ஏற்பட்டது.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் 300 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரியை, கட்சி நிர்வாகிகள் சிலர் முற்றுகையிட்டனர்.

அப்போது அங்கிருந்த இரண்டு பேர் கன்னத்தில் அடித்த அழகிரி வெளியேறுமாறு கூறினார். இந்த முற்றுகையின் போது இருதரப்பு நிர்வாகிகளிடையே மோதல் ஏற்பட்டது. 

இதையடுத்து ஒருவரை ஒருவர் கட்டையால் தாக்கிக் கொண்டனர். காங்கிரஸ் அலுவலகத்திற்கு வெளியே சாலையிலும் இந்த மோதல் தொடர்ந்தது. இதில் ஒருவருக்கு தலையிலும், ஒருவருக்கு முகத்திலும் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.

இந்த மோதலால் அங்கு கலவரம் போன்ற சூழல் உருவானது. இதனைத் தொடர்ந்து சத்தியமூர்த்தி பவனுக்கு போலீசார் வரவழைக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 

Share this story