காண்ட்ராக்டர் தற்கொலை விவகாரம்; அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் : ஈஸ்வரப்பா

ee

கர்நாடக  மாநிலத்தில், கான்ட்ராக்டர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை தொடர்பாக, அந்த மாநில அமைச்சர் ஈஸ்வரப்பா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறிய ஈஸ்வரப்பா, முதலமைச்சர் பசவராஜ் பொம்மையை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளேன் என தெரிவித்தார்.

இதற்கிடையே, கான்ட்ராக்டர் சந்தோஷ் பாட்டீல் மரணம் தொடர்பான வழக்கில், ஈஸ்வரப்பாவை கைது செய்யக்கோரி, பெங்களூருவில் உள்ள சட்டசபை வளாகமான விதான் சவுதாவில் எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  
 
இந்நிலையில், கர்நாடக அமைச்சர் பதவியை ஈஸ்வரப்பா ராஜினாமா செய்தார். 

முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் வீட்டுக்கு சென்ற ஈஸ்வரப்பா ராஜினாமா கடிதத்தை அவரிடம் அளித்தார்.

Share this story