கொரோனா தொற்று : ராமதாஸ் நலம் பெற, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
 

stalin234

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு நேற்று மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால், அவர் தைலாபுரம் தோட்ட இல்லத்தில் தன்னை தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், ராமதாஸ் நலம்பெற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ; கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அய்யா ராமதாஸ் அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன்' என பதிவிட்டுள்ளார். 

மு.க.ஸ்டாலின் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஆழ்வார்பேட்டை இல்லத்தில், தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
*

Share this story