ஊழல் இல்லாத தேசியம் : பாஜகவுக்கு ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை

marudhu57

'கனவு மெய்ப்பட வேண்டும், நல்ல காரியம் ஆவது விரைவில் வேண்டும்' என அன்று தேசியக்கவி பாரதி முழங்கினார்.

அதுபோல, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக செய்தித் தொடர்பாளருமான கவிஞர் மருது அழகுராஜ், தேசியம் நலமுற.. வளம்பெறும் வண்ணமும் எண்ணமுமாய் விடுத்துள்ள அறிக்கை வருமாறு :

ஊழலுக்கு அதிகபட்ச எதிர்ப்பு நிலையை கடைபிடிக்கிறது பா.ஜ.க. அதே ஊழலை, தங்களது அரசியல் விஸ்தரிப்புக்கு ஆயுதமாக பயன்படுத்துகிறதோ என்கிற ஐயத்திற்கு வாய்ப்பு தரக்கூடாது.

ஊழல் திமிங்கலங்கள் இல்லாத தேசத்தை கட்டி எழுப்பவும், அடுத்த தலைமுறை அரசியலையாவது மக்களுக்கு செய்கிற தொண்டூழியம் என்பதாக பொதுவாழ்வை உருவாக்க வேண்டும்.

வரி ஒழுக்கங்களை உருவாக்கி, தேசத்தின் வளர்ச்சிக்கு மக்களின் பங்களிப்பை மிகைப்படுத்துவது மட்டுமன்றி, அப்படி மக்களிடமிருந்து திரட்டப்படும் வரி வருவாயை மக்கள் நலத் திட்டங்களுக்கும் தேசத்தின் வளர்ச்சிக்கும் முழுமையாக பயன்படுத்த, ஊழல் இல்லாத நிர்வாகச் செம்மையை தொடர்ந்து நிலைநாட்ட வேண்டும்.

இதன் மூலம், அடுத்த தலைமுறை இந்திர்களாவது கடன் இல்லாத இந்தியக் குடிமக்களாக தலைநிமிர்ந்து வாழும் பாரதத்தை கட்டமைக்க வேண்டும்.  

இதன் மூலம், ஜாதி மதம் கடந்து சகல இந்தியர்களும் சந்தோஷமாக வாழும் நாடாக  எதிர்கால இந்திய தேசம் உருவாகட்டும்.

இவ்வாறு அதிமுக செய்தித்தொடர்பாளர்  கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
*

Share this story