அதிமுக அலுவலக சாவியை, ஈபிஎஸ்சிடம் ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவு
Wed, 20 Jul 2022

ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு அன்று ஏற்பட்ட மோதலை அடுத்து, அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
அதிமுக அலுவலகத்தின் சீலை அகற்ற உத்தரவிடக்கோரி ஈபிஎஸ், ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது.
விசாரணையின் முடிவில், சென்னையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் திருமாறன் கூறியதாவது :
அலுவலக உரிமை தொடர்பாக ஆராயாமல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆர்.டி.ஓ உத்தரவை நேரடியாக ரத்து செய்தது தவறு. உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியும்' என்றார்.
*