திமுக உட்கட்சி தேர்தல் : 22-ந் தேதி முதல் வேட்புமனு தாக்கல்..

By 
dmke

திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 22ந் தேதி முதல் தொடங்கும் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

22ந் தேதி முதல் வரும் 25ந் தேதிவரை மாவட்ட வாரியாக வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மாவட்ட செயலாளர், மாவட்ட அவைத்தலைவர், மாவட்ட துணைச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

வேட்புமனு விண்ணப் படிவம் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி தலைமைக் கழகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Share this story