எடுப்ஸின் புட்டிப்பால் குட்டிப்புள்ளிங்கோ, சுத்திக்கிட்டு அலையுதுங்க : ஓபிஎஸ் தரப்பு சம்ஹாரம்

By 
marudhu23

தமிழகத்தில், அதிமுகவில் நிகழும் ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமை யுத்தம் யாவரும் அறிந்ததே.

இந்நிலையில், அதிமுக செய்தித்தொடர்பாளர் கவிஞர் மருது அழகுராஜ் ஆதரவாளர் தெ.செ.(கி) மாவட்டச் செயலாளர் சுனில் தெரிவித்துள்ள நிகழ்வுச்செய்திகள்  வருமாறு :

2017-ல் ஓ.பி.எஸ் அம்மா மறைவுக்கு பிறகு, தர்மயுத்தம் நடத்தியபோது.. அவரது நிலைப்பாட்டை  மருது அழகுராஜ்  விமர்சித்த ஒரு பழைய வீடியோவை வச்சிக்கிட்டு, எடுப்ஸ்ஸின் புட்டிப்பால் குட்டிப்புள்ளிங்கோ சுத்திக்கிட்டு அலையுதுங்க..

வேனும்னா, இன்னும் சில வீடியோக்களை சொல்றேன் எடுத்துப் போடு..

விசுவாசத்தை ஓ.பி.எஸ் கிட்ட தான் கத்துக்கிட்டேன்னு சொல்லிட்டு, இப்போ துரோகத்தை தவழ்ந்தசாமிக்கிட்ட கத்துக்கிட்டிருக்கும் ஊத்தவாயன் உதயகுமாரின் வீடியோ மற்றும் நமது கழகம்.. போட்டி அண்ணா திமுக கண்ணப்பன் கட்சி உள்ளிட்ட துரோக எபிசோடுகளில் ராஜன் செல்லப்பா அருளிய உபன்யாச வீடியோக்கள்..

கே.பி.முனுசாமி ஓ.பி.எஸ் கோட்டாவுல.. மினி மீல்ஸ் மெயின் மீல்ஸம் சாப்பிட்டபோது பேசிய சவடால்கள் 

கூடவே, போன வருசம் வரை சிலுவம்பாளையத்து வெல்லம் உருட்டி; தனது ஆட்சியை நடத்தி முடிக்கும் வரை  ஓ.பி.எஸ் அவர்களை "அண்ணண் அண்ணன்" என்று  முறை மாமன் படத்துல கவுண்டமணிய,  நாய் தொறத்தறப்ப முகமூடிய கழட்ட முடியாம கத்திக்கிட்டு ஓடுறமாதிரி... தரைப்பாடி சுத்திக்கிட்டு அலைஞ்சானே.. அந்த பதிவுகளையும் எடுத்துக்கிட்டு வந்தீங்கனா... நாம் ஆற அமர்ந்து பேச வசதியா இருக்கும் 

புரியுதா..சேக்கிழாரின் கம்பராமாயணம் சொம்புகளே..

இவ்வாறு அதிமுக செய்தித் தொடர்பாளர் கவிஞர் மருது அழகுராஜுக்கு, கழக மாணவரணி தெ.செ.(கி) மாவட்டச் செயலாளர் சுனில் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முன்னதாக ஓபிஎஸ் தரப்பிலிருந்து, அதிமுக செய்தித் தொடர்பாளர் கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்ட ஓர் கண்டன சிறுகதை வைரலானது.

'ஓர் எறும்புகளின் உழைப்பில் உருவான அழகிய புற்றுக்குள், ஒரே ஒரு முறை சுற்றிப்பார்க்க
அனுமதி கேட்டது கட்டுவிரியன்..

சூதுவாது அறியாத எறும்புகள், கட்டுவிரியன் திட்டம் தெரியாமல், ஒரு முறை சுற்றிப்பார்க்கத்தானே..என வெள்ளந்தி எறும்புகள் அதற்கு ஒப்புக் கொண்டன.

புற்றுக்குள் போன கட்டுவிரியன்...எறும்புகள் உழைப்பில் கட்டப்பட்ட புற்றின் அழகு நேர்த்தி.. இவற்றில் சொக்கிப் போனது..

எறும்புகளை கூப்பிட்டு, இனி இந்த புற்று எனக்கே சொந்தம்..நீங்கள் வேறு புற்று கட்டிக் கொள்ளுங்கள்.
மீறினால், விஷத்தை பாய்ச்சி விடுவேன்..என கட்டுவிரியன் கர்வம் கொப்பளிக்க..

கலங்கி நின்ற எறும்புகள்.. அருகிலிருந்த முனிவர் ஒருவரிடம் முறையிட்டன.

கட்டுவிரியனை அழைத்த முனிவர்,'

முறையற்ற செயல் இது. அடுத்தவர் உழைப்பில் உருவானதை அபகரிக்க முயல்வது, அடுக்காத செயல்; அது, அழிவு வந்தே தீரும்'  என அதிமுக செய்தித்தொடர்பாளர் கவிஞர் மருது அழகுராஜ் கனன்றுள்ளது குறிப்பிடத்தத்தது.
*

Share this story