அதிமுக மீது ஈவிகேஎஸ்.இளங்கோவன் கடும் தாக்கு

By 
evkse

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசனை சந்தித்து பேசினார்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

* ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு குறித்து நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து கமல் அறிவிப்பார்.

* அதிமுக இரண்டாக உடையவில்லை, நான்காக உடைந்துள்ளது.

* கடந்த சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 10 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் வாங்கியது. இவ்வாறு அவர் கூறினார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று காலையில் அண்ணா அறிவாலயம் சென்று தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

அதன் பிறகு அங்கிருந்து தி.நகரில் உள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்துக்கு சென்று கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனை சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கனகராஜ், என்.குணசேகரன் உடன் இருந்தனர்.

இதன் பிறகு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசனை அவரது அலுவலகத்துக்கு சென்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்தித்து ஆதரவு கேட்டார். பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சந்தித்து பேசி ஆதரவு கேட்டார்.

 

Share this story