எடப்பாடி மட்டியும், ஏழெட்டு மடையர்களும் : ஓபிஎஸ் தரப்பு கடும் தாக்கு

'எடப்பாடியிடம், பணம் இருக்கு என்னும் ஒற்றைக் காரணத்தை சொல்லி, அந்த சொத்தைக் தலைமையை ஒற்றைத் தலைமை ஆக்கப் போறோம்னு ஒரு கூட்டம் ஆலவட்டம் வீசுகிறது என்றால், அவர்களை துரத்தி அடிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் கழகத்தின் தூய தொண்டர்களுக்கே உரியதாகும்' என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது :
அம்பிகா காபி ஹோட்டல் என எழுதியிருப்பதை, எடப்பாடியிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னால்.. அவர் "அம்பி- காகாபி" ஹோட்டல் என்று தான் வாசிப்பார். இந்த அளவில் தான், அன்னாரது வாசிக்கும் மற்றும் யோசிக்கும் திறன்.
இவரைக் கொண்டு ஒரு திராவிட இயக்கத்தை வழி நடத்துவது என்பது, குதிரை முட்டை வாங்க போன மட்டி மடையர் கதை தான்.
காசு எண்ணத் தெரிந்த கல்லாப்பெட்டித் திறமையை தவிர, எடப்பாடிக்கு வேறெதுவும் தெரியாது. காண்ட்ராக்டர்களை மட்டும் தான் அவர் விரும்புவாரே தவிர, கட்சிக்காரர்களது முகம் பார்க்க கூட அவருக்கு பிடிக்காது.
அவரை எளிய மனிதர்கள் சந்திக்க சென்றால், அவர் எழுந்து நின்று கொள்வார். காரணம், மரியாதை தருவதற்கு அல்ல.. வந்தவர்கள் தன் எதிரே அமர்ந்து விடக் கூடாது என்பதற்காகத் தான்..
இன்னும் ஒருபடி மேலே சொல்வதென்றால், தனக்கு பொக்கே-சால்வை எடுத்துக்கொண்டு வரும் எளிய தொண்டர்களை வீட்டுக்குள் அனுமதிக்காமல் வாசலிலேயே நிறுத்தி வைத்து, மேல் படியில் அவர் நின்று கொண்டு வந்தவர்களை கீழ் படியில் நிறுத்தித்தான் அந்த போக்கே சால்வைகளை பெற்றுக் கொள்வார் .
ஆக, இதைவிட அவரது பெருந்தன்மைக்கு சான்று வேண்டுமோ.. இப்படி, ரசிப்பதற்கும் போற்றுவதற்கும் ஏதுமில்லா கூமுட்டை தான் எடப்பாடி என்பதை மனசாட்சி கொண்டவர்கள் மறுக்க மாட்டார்கள்.
ஆனாலும், பணம் இருக்கு என்னும் ஒற்றைக் காரணத்தை சொல்லி, அந்த சொத்தைக் தலைமையை ஒற்றைத் தலைமை ஆக்கப் போறோம்னு ஒரு கூட்டம் ஆலவட்டம் வீசுகிறது என்றால், அவர்களை துரத்தி அடிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் கழகத்தின் தூய தொண்டர்களுக்கே உரியதாகும்..
செய்வீர்களா. நீங்கள் செய்வீர்களா..
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.