எடப்பாடி கட்சியின் மதுரை முகவர் ஆர்.பி.உதயகுமார் உணர வேண்டும் : மருது அழகுராஜ் தாக்கு

rpu

ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் ஏன் இன்னும் ரெய்டு நடக்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு அதிமுக செய்தி தொடர்பாளரும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான மருது அழகுராஜ் விளக்கம் அளித்து, வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

ஓ.பி.எஸ்.வீட்டில் மட்டும் ஏன் இன்னும் ரெய்டு நடக்கலைன்னு கேள்வி எழுப்பியிருக்கிறார் எடப்பாடி கட்சியின் மதுரை முகவர் ஆர்.பி.உதயகுமார்...

இது என்ன  அபத்தமான கேள்வி ...

எங்களுக்கு தொழில் சொல்லிக் கொடுத்த குரு எடப்பாடி வீட்டுல இன்னும் ஏன்  ரெய்டு நடத்தலைன்னு கேட்டா அது நியாயம்  

அதை விட்டுட்டு, எல்லை மீறி போகாதீங்கன்னு அவ்வப்போது அறிவுரைகள் சொல்லி, நெறிப்படுத்த முயற்சித்த ஓ.பி.எஸ் வீட்டுக்கு ஏன் ரெய்டு வரனும்.

வேனும்னா ஒன்னு செய்யலாம்  எடப்பாடியின் கோட்டை விவகாரங்கள் தொடங்கி, கொடநாடு வரையிலான வேட்டைகளுக்காக மொத்த ரெய்டுகளையும் முடிச்சிட்டு, கூடுதலாக மேலதிக விபரங்களுக்காக வேண்டுமானால், திராவிட இயக்கங்களின் ஆட்சியில் நாவலருக்கும் அதிகமாக நிதிநிலை அறிக்கைகளை தாக்கல் செய்த நிதி அமைச்சர் என்ற வகையில் ஓ.பி.எஸ் அவர்களை விசாரணை அமைப்புகள் தொடர்பு கொண்டு கோப்புகள் குறித்தான விபரங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.  

அது தான் நியாயம்..அதனால, விரல் சப்பியவரை விட்டுப்புட்டு, வேடிக்கை பார்த்தவர் மீது எரிச்சல் படக்கூடாது என்பதை உதயகுமார் உணர வேண்டும். 

.மேலும் வெகுகாலம் "வருவாய்"துறை அமைச்சராக இருந்த, தன்னோட வீட்டுக்கு இன்றுவரை ரெய்டு வராமல் பார்த்துக்கிட்ட ரகசியத்தையும் உதயகுமார் ஊருக்கு சொன்னால் நன்றாக இருக்கும்..புரியுதா...

இவ்வாறு கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

Share this story