எடப்பாடியும் டெண்டர் கும்பலும் : தொண்டர்களுக்கு ஓபிஎஸ் தரப்பு முக்கிய தகவல்

marudhu41

கழகமே உலகம் என வாழும் தொண்டர்களுக்கு, அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக செய்தித் தொடர்பாளருமான கவிஞர் மருது அழகுராஜ் விடுத்துள்ள முக்கிய செய்தி வருமாறு :

நெடுஞ்சாலை துறையில் சம்பந்தியை வைத்து அடித்த பல்லாயிரம் கோடி கொள்ளை...
கொடநாடு தொடங்கி, கொரானா வரை திட்டமிட்டு அடித்த கொள்ளைகள்..

ஸ்மார்ட் சிட்டி ஊழல் முதல் இரண்டு லட்சம் டன் நிலக்கரி வரை வாரிச் சுருட்டிய பல்லாயிரம் கோடிகள்...
இந்த வரிசையில், பதினோரு மருத்துவ கல்லூரிகள் நிறுவியதில் அரங்கேற்றிய ஊழல்கள் என,  

வகை தொகை இல்லாத அடித்துச் சுருட்டிய கொள்ளை பணத்தைக்கொண்டு அண்ணா 
திமுக  என்கிற இயக்கத்தையே அபகரித்து அழிக்க எடப்பாடியின் டெண்டர் கும்பல் வெறி கொண்டு அலைகிறது என்றால்..

அதனை ஒன்று திரண்டு முறியடிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் கழகத் தொண்டர்களுக்கு உரியதாகும்.

இவ்வாறு அதிமுக செய்தித்தொடர்பாளர் கவிஞர் மருது அழகுராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share this story