இயக்கத்தை வழி நடத்துவதற்கான எந்த தகுதியும் எடப்பாடிக்கு இல்லை : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அதிரடி..

marudhu4

சொத்தத் தலைமை எடப்பாடி, ஒற்றைத் தலைமைக்கு ஆசைப்படுவதை விட்டுவிட்டு, கழகத்தின் ஒற்றுமைக்கு பாடுபடலாம் என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக செய்தித் தொடர்பாளருமான கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

என்னை எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வகையில், எனக்கு நடந்து கொள்ளத் தெரியாது. ஆனால், என்னை ஏற்க மறுக்கும் எல்லோரையும் எனக்கு நீக்க மட்டும் தெரியும் என்றால், இது தலைமைக்கு தகுதியற்ற தற்குறித்தனமல்லவா...

அதனால... ஒரு ஹீரோ தொடங்கி, ஒரு ஹீரோயின் வழிநடத்திய அண்ணா தி.மு.க.வை..  குணச்சித்திரமே வடிவான ஓ.பி.எஸ் வழிநடத்துவதே சிறப்பாகவும்  பொருத்தமாகவும் இருக்கும்..

அதைவிடுத்து, ஈர்ப்பு சக்தி ஏதுமில்லாத கோமாளியாகவும்.. குத்துக்கோல் தொடங்கி, கொடநாடு வரையிலான நடவடிக்கைகளையும் பொருத்திப் பார்க்கும்போது, ஒரு கொடூரமான வில்லனாகவும்...

அனைத்துக்கும் மேலாக, நன்றி உணர்வை தனது ரத்தத்திலேயே கொண்டிராத அருவருப்பு ஆசாமியாகவும் திகழும் எடப்பாடிக்கு அண்ணா திமுக  என்னும் அன்பியல் இயக்கத்தை வழி நடத்துவதற்கான எந்த தகுதியும் அவரிடம் இல்லை...

எனவே, சொத்தத் தலைமை எடப்பாடி ஒற்றைத் தலைமைக்கு ஆசைப்படுவதை விட்டுவிட்டு, கழகத்தின் ஒற்றுமைக்கு பாடுபடலாம்...

அது இயலாது என்றால், கழகத்தை விட்டு வெளியேறி..வாழவைத்த. கட்சிக்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொள்ளலாமே.

இவ்வாறு அதிமுக செய்தித் தொடர்பாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

*

Share this story