துரோகத்தின் அடையாளம் எடப்பாடி : மான, ரோசமுள்ள தொண்டர்கள் சூளுரை- மருது அழகுராஜ்  

marudhu71

'சகலருக்கும் ஆன இயக்கத்தை அழித்து, சகலமும் நானே.. என்னும் சகதியில் மூழ்குகிற சிரிப்புச் சர்வாதிகாரியே..' என எடப்பாடி பழனிச்சாமிக்கு எச்சரிக்கை விடுத்தும், ஒன்றரைக்கோடி தொண்டர்களுக்கு தெளிவுறுத்தியும், 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள கவிதைச் செய்தி வருமாறு :

* தேர்ந்து எடுக்கப்பட்டவர்களுக்கு மத்தியில்,
ஊர்ந்து எடுக்கப்பட்ட உத்தமரே..

குத்துக்கோல் பிடித்த கையில்,
செங்கோல் பிடித்த வித்தகரே..

கொடநாடை கொலை நாடாக்கிய
பல்கலை வித்தகரே..பாம்பாட்டி சித்தரே..

* சம்பந்திக்காக,
நெடுஞ்சாலை துறையையே

சம பந்தி ஆக்கிய சரித்திரமே..

* கம்பராமாயணம் எழுதியது, 
சேக்கிழாரே என்பதை கண்டறிந்த துப்பறிவு புத்தகமே..

* தொண்டர்கள் கட்சியை
டெண்டர்களின்
கம்பெனி ஆக்கிய
கழகத்தின் அம்பானியே.. கல்லாப் பெட்டி சிங்காரமே..

* ஒன்றான இயக்கத்தை
துண்டாக்கியகோடாரியே..

பொதுக்குழுவை
புதை குழியாக்கிய வியாபாரியே..

நல்லா இருந்த கட்சியை
நாலு துண்டாக்கி,
மூட்டை பணத்தை கொண்டு,
முடிசூட அலைகிற கோமாளியே..

* சகலருக்கும் ஆன இயக்கத்தை அழித்து
சகலமும் நானே என்னும்
சகதியில் மூழ்குகிற
சிரிப்புச் சர்வாதிகாரியே.

துரோகத்தின் அடையாளமே.. 
கூவத்தூர் அவமானமே..

உய்வில்லை 
செய் நன்றி கொன்ற
மகர்க்கு

என்னும் வள்ளுவன் குறளுக்கு
வாழ்நாள் அடையாளமே..

உன்னை வீழ்த்தாமல்
ஒயமாட்டோம்..

உன் அபகரிப்பு அரசியலை
சாய்க்காமல்
தலை சாயமாட்டோம்..

இப்படிக்கு..

பணத்துக்கும், பதவிக்கும்
விலைபோகாத
மான, ரோசமுள்ள
தொண்டர்கள்..

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

Share this story