எடப்பாடி, அதே வன்மம் படிந்த அரசியல் முறையை அதிமுகவிலும் அரங்கேற்றி வருகிறார் : மருது அழகுராஜ் குற்றச்சாட்டு

marudhu16

தமிழக சட்டசபையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பந்தமான தீர்மானம் தொடர்பாக உறுப்பினர்கள் பேசினார்கள். அப்போது முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள்.

வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி) தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஆணையம் கூறி உள்ளது. அதனையும் இந்த அரசு உடனடியாக வழங்க வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவலர் முதல் ஐ.ஜி. வரையிலான உயர் அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும். அப்போது முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈசுவரன் ( கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி) தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் யார் மீதெல்லாம் சந்தேகம் உள்ளது என்பது தொடர்பாக, நீதிபதி அருணா ஜெகதீசன் தெளிவாக எழுதி கொடுத்து உள்ளார். மனிதாபிமானற்ற முறையில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரையும் விசாரித்து உரிய தண்டனை வழங்க வேண்டும். எதிர் காலத்தில் இப்படி ஒரு சம்பவம் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி) தூத்துக்குடியில் ஜாலியன் வாலாபாக் என்று கூறப்படும் அளவுக்கு நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். டி.ஐ.ஜி. முதல் உயர் அதிகாரிகள் வரை குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. அனைவரையும் விசாரித்து உரிய தண்டனை வழங்க வேண்டும். அப்போது இருந்த டி.ஜி.பி. தலைமை செயலாளர் ஆகியோர் அன்றைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உரிய தகவல்கள் தெரிவித்து இருப்பார்கள்.

ஆனால் அவர் துப்பாக்கி சூடு சம்பவம் எனக்கு தெரியாது என அப்போது தெரிவித்தார். இதற்கு முழு பொறுப்பு எடப்பாடி பழனிசாமி தான். எனவே அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சதன் திருமலைகுமார் (ம.தி.மு.க.) தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டின் போது போலீஸ் வேனில் படுத்துக்கொண்டே சுட்டு வீழ்த்தி உள்ளனர். இந்த தவறுக்கெல்லாம் அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் பதில் சொல்ல வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் தமிழக அரசின் நடவடிக்கை அமைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதே கோரிக்கையை கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி பேசினார்கள். எம்.எல்.ஏ.க்கள் இப்படி பேசிய போது ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் சட்டசபையில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், யார், யார் குற்றவாளிகளோ, அவர்களெல்லாம் நிச்சயமாக கூண்டில் ஏற்றப்படுவார்கள் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

இந்நிலையில், ' எடப்பாடி.., வன்மம் படிந்த அரசியல் முறையை அண்ணா திமுக.விலும்  அரங்கேற்றி வருகிறார்' என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக செய்தித் தொடர்பாளருமான கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு  வருமாறு :

சொற்ப நாட்கள் மட்டுமே நடக்கும் சட்டப் பேரவையை, அற்ப பதர் எடப்பாடி அரசியல் அரிப்புக்கு..

சொறிந்து சுகம் கொடுக்க, அறுபது கூமுட்டைகள்.. அவை புறக்கணிப்பு என்றால்..

அதுவும் அம்மா மரணத்தை விசாரிக்க, இவர்கள் அமைத்த ஆணையத்து விசாரணை அறிக்கை,

பேரவையில் சமர்ப்பிக்கும் அதிமுக்கிய நிகழ்வை உதாசீனம் செய்வதும்,

ஓட்டுப்போட்ட மக்களது உரிமைக்கும் குரல் கொடுக்காது, ஓடி ஒளிந்து கொள்வதும்..

இவையாவும் மேலாக..

அரசியல் பச்சோந்தி ஆகாத முச்சந்தி உதயகுமார் பதவிக்காக,

எடப்பாடி மூடர் கூடம் எடுக்கிறது இந்த புறக்கணிப்பு முடிவை என்றால்..

இவர்கள் மக்கள் பிரதிநிதிகளா..

இல்லை.. மதியற்ற பீ  தின்னிகளா.?

முன்னதாக, ஒரு பாதை இடத்துக்காக, பங்காளிகள் இருவரை குத்துக்கோலால் கொலை செய்துவிட்டு,

அந்த பாதை நிலத்தை செத்துப் போனவர்களின் குடும்பத்துக்கு எழுதிக் கொடுத்து,

 பஞ்சாயத்து பேசி, வழக்கில் இருந்து தப்பித்து வந்தது தான் எடப்பாடியின் வரலாறு...

அதே வன்மம் படிந்த அரசியல் முறையை அண்ணா திமுக. விலும் அவர் அரங்கேற்றி வருகிறார்.

இந்த மூர்க்கத்தனம் கட்சியை புதைகுழியில் தள்ளுகிற காரியம்.

இவ்வாறு அதிமுக செய்தித் தொடர்பாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
*

Share this story