துரோகத்தின் அடுத்த அத்தியாயத்திற்கு எடப்பாடி தயார்; பாஜக உஷார் : மருது அழகுராஜ் 

marudhu48

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக செய்தித் தொடர்பாளருமான கவிஞர் மருது அழகுராஜ் உரை வருமாறு :

'பாஜகவை பொறுத்தவரையில், ஓபிஎஸ்- இபிஎஸ் ஒன்றுபட்டு நின்றால்தான் நல்லது என நினைக்கிறார்கள். 

இதற்கு இடையூறாக இருப்பவர் ஈபிஎஸ். இவர், தனது எதிர்காலத்தில் அரசியல் அதிகாரத்தை நிச்சயம் இழந்து விடுவார் என நான் நம்புகிறேன்.

எடப்பாடியின் டெண்டர் கும்பலும், கரன்சி வியூகமும் இனி எடுபடாது.

அண்ணா திமுக தொண்டர்கள் அனைவரும், ஓபிஎஸ் பக்கமே நிற்கிறார்கள். 

இன்றைய அரசியல் சூழ்நிலையில், திமுகவுக்கு வாக்களித்தவர்கள் கோபமாய் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் வாக்குகள் அனைத்தும் அதிமுக- பாஜக கூட்டணிக்கே வந்து சேரும். ஏனெனில், திமுக அரசு தனது ஒன்னே முக்கால் வருஷத்தில் மார்தட்டி சொல்வதற்கு எதையுமே செய்து முடிக்கவில்லை.

மாதம் ரூ.1000 என்று சொன்னார்கள், வரவில்லை. சிலிண்டர் மானியம் சீட்டிங்காய் போயிற்று.

மாத மாதம் மின்கட்டண கணக்கெடுப்பு பொய்யாய் ஆயிற்று. அரசு ஓய்வூதியத் திட்டம் பழங்கதை ஆயிற்று..என சொல்லிக் கொண்டே போகலாம்.

திமுக ஆட்சியில் எத்தனை முதலமைச்சர்கள் தான் உள்ளனர்? குடும்ப ஆட்சி ஆயிற்று. வாக்களித்த மக்களின் கோரிக்கைகளும் காற்றோடு போயிற்று.

தமிழக முதலமைச்சரே  புலம்புகிற நிலை வந்து இருக்கிறது என்று சொன்னால், எந்த அளவிற்கு நிர்வாகம் ஸ்தம்பித்துப் போய் இருக்கிறது. நிச்சமாக, திமுகவின் அரசு நிர்வாகம் முற்றிலும் தோற்றுப் போய் கிடக்கிறது. 

இந்த சூழ்நிலையில், பிளவுபட்டு நிற்கும் பேரியக்கமாம் அண்ணா திமுகவில், எடப்பாடி பழனிசாமி திமுக.வுக்கு மறைமுகமாக உதவி செய்கிறாரோ என்றே ஒன்றரைக் கோடி அண்ணா திமுக தொண்டர்களின் வேதனையாய் இருக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமியை பொறுத்தவரையில் புரட்சித்தலைவி அம்மா, சசிகலா, என தொடர்ந்து தற்போது பாஜக வெற்றியையும் தடுக்கும் பொருட்டு துரோகத்தின் அடுத்த அத்தியாயத்திற்கு தயாராகி வருகிறார் என உறுதியாய் நம்புகிறேன்.

இவ்வாறு அதிமுக செய்தித் தொடர்பாளர் கவிஞர் மருது அழகுராஜ் கூறியுள்ளார்.
*

Share this story