எடப்பாடி வகையறாக்கள், அதனை மோசடி துரோகம் என்றெல்லாம் எடுத்துக்கொள்ள மாட்டார்கள் : மருது அழகுராஜ் விளாசல் 
 

By 
marudhu79

அதிமுகவில், எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள அரசியல் நிலைப்பாட்டுக்கும் மற்றும் அவர் சார்ந்தவர்களின் பேச்சுக்கும்.. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் கடும் கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தித்துளிகள் வருமாறு :

* ஒருவர் உருவாக்கி கொடுத்த வாய்ப்பால் முதலமைச்சர் ஆகிவிட்டு ... ஒருவர் கொடுத்த ஆதரவாலும், ஒத்துழைப்பாலும் நான்கரை ஆண்டுகள் ஆட்சியை நடத்தி பல லட்சம் கோடிகளை சம்பாதித்து விட்டு, 

இருவரையுமே அழிக்கனும் ஒழிக்கனும்னு "அந்த அவன்" அலையுறான்னா அவன் எப்படி மக்களுக்கும் கட்சிக்கும் குறிப்பா, அந்த ஆளுக்கு காவடி தூக்கும் ஆட்களுக்கும் உண்மையா இருப்பான்.?

பெரியார் பாணியில் சொன்னா..அட முட்டாப் பசங்களா யோசிங்கடா..

நன்றியுணர்ச்சியும் விசுவாசமும் இல்லாத ஒருத்தன நம்புறதும்..விஷத்தை சத்து மருந்துன்னு விழுங்குறதும் ஒன்னுதானே.

* ஒனக்கென்னப்பா நீ பைத்தியம்.. தாஜ்மகால் உரிமை குறித்து, சாஜகானுக்கு கூட  நோட்டீஸ்  அனுப்புவ..

* ஓ.பி.எஸ் ஒப்புதலோடு தான் அம்மாவை நிரந்தர பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கினோம் - செல்லூர் ராஜூ.. 

'அடப்பாவி.. நீங்க அம்மாவ நீக்குன பொதுக்குழுவுக்கு அவரு வரவே இல்லையே.. அதுசரி... ஒனக்கென்னப்பா நீ விஞ்ஞானி; அம்மாவின் ஒப்புதலோடு தான்.. அம்மாவை நீக்கினோம்னு கூட சொல்லுவே.

* துரோகம் என்று சொல்லாதீர்கள். அது சாமர்த்தியம் சாதுர்யம். இப்படி தரைப்பாடி குரூப் கம்பு சுத்துகிறது.

ஓ.கே. அப்படி என்றால் எடப்பாடி, வேலுமணி, தங்கமணி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஆங்காங்கே கொடுத்து வைத்திருக்கும் பணத்தை கேட்கும்போது திருப்பிக் கொடுக்காமல் ஆட்டய போட்டால், மேற்படி எடப்பாடி வகையறாக்கள் அதனை மோசடி துரோகம் என்றெல்லாம் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அதனை திறமை சாமர்த்தியம் என்றே உள்வாங்கி கொள்வார்கள்; அப்படித்தானே..

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

Share this story