எடப்பாடியை, மனிதக் கணக்கிலிருந்தே  காலம் கழித்து விடும்  : மருது அழகுராஜ் கடும் தாக்கு 

marudhu62

'தலைமைத் தகுதியற்ற எடப்பாடி தன் தவறுகளுக்கு மனமுவந்து மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் அவரை மனிதக் கணக்கிலிருந்தே  காலம் கழித்து விடும் என்பது நிச்சயம்' என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

தன் அபகரிப்பு முயற்சிகள் அனைத்தும் கரன்சிக்கு மயங்காத கழகத் தொண்டர்களால் முறியடிக்கப்பட்டது என்பதை எடப்பாடி ஒப்புக் கொள்ள வேண்டும். 

தொண்டர்கள் ஓட்டுப் போட்டு  ஐந்தாண்டு காலத்திற்கு தேர்வு செய்த தலைமையை இரண்டே மாதத்தில் செல்லாது என்பதாக அறிவித்தது..

ரவுடிகளுக்கு கரை வேட்டி கட்டிவிட்டு பொறுக்கிகளை கலந்து வைத்து பொதுக்குழு நடத்தியது..

அதில் புரட்சித் தலைவி அம்மா அடையாளம் காட்டிய பொன்மனத் தலைவர் ஓ.பி.எஸ்ஸை அவமானப்படுத்த முயன்றது..

கழக நிறுவனர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் வகுத்து தந்த மாற்றக் கூடாத கட்சியின் அடிப்படை சட்ட விதிகளை தன் ஒருவனுக்காக
மாற்றியது..

நிரந்தர பொதுச் செயலாளர் பதவியிலிருந்தே அம்மாவை நீக்கியது..

கட்சியின் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என குரல் கொடுத்தவர்களை எல்லாம் கட்சியில் இருந்து நீக்குகிறேன் என்று ஆணவம் கொண்டு அலைந்தது..
 இவையாவுக்கும் மேலாக கட்சித் தொண்டர்களிடையே தன் ஒருவனது சுயநலத்திற்காக பிளவை உருவாக்கியது..

இப்படியாக, தன் சொத்தைத் தலைமையை ஒற்றைத் தலைமையாக்க எடப்பாடி மேற்கொண்ட  முட்டாள் தனத்திலான மொத்த அபகரிப்பு முயற்சிகளும்  கரன்சிக்கு மயங்காத கழகத் தொண்டர்களால் முறியடிக்கப்பட்டிருக்கிறது.

எனவே..தலைமைத் தகுதியற்ற எடப்பாடி தன் தவறுகளுக்கு மனமுவந்து மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் அவரை மனிதக் கணக்கிலிருந்தே  காலம் கழித்து விடும் என்பது நிச்சயம்.

கழக நிறுவனர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் வாழ்ந்த ராமாவரம் தோட்டத்திற்கு  இவர் போனதே இல்லை..

அந்த மக்கள் திலகத்தின் மனைவியும்  அ.தி.மு.க. தலைமைக் கழகத்திற்கு தான் உழைத்து வாங்கிய ஔவை சண்முகம் சாலை கட்டிடத்தையே  கட்சிக்கு தானமாக தந்த   முன்னாள் முதல்வர் ஜானகி அம்மாள் பிறந்த நாளுக்கும் வாழ்த்தும் சொல்லல‌.

கூடவே அவங்கள மலிவாகவும் பேசுறே.. அதே போல, 

மக்கள் திலகத்தின் முதல் வெற்றி வேட்பாளரும் இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க வுக்கு பெற்றுத் தந்தவருமான மாயத் தேவர் மரணத்துக்கும்  அஞ்சலி செலுத்தக் கூட வரலை..

இவ்வளவு ஏன்..அம்மாவின் நினைவிடத்திற்கு நாள் தோறும் மலர் அலங்காரத்தை தன் சொந்த செலவில் செய்து  வருவது  ஓ.பி.எஸ். அவர்களது இளைய மகன் ஜெயபிரதீப் தான்.. உனக்கு அதை பத்தியெல்லாம் நெனப்பே இல்லை..

ஆக நன்றி உணர்வு என்பது தனது ரத்தத்திலேயே  இல்லாத நீ..ரத்தத்தின் ரத்தமே என்று தனக்கு ரத்தம் கொடுத்த தொண்டர்களை  தான் உயிர் வாழும் காலமெல்லாம் உச்சரித்து நன்றி சொல்லி வாழ்ந்த அந்த உத்தமத் தலைவனின் உதிரத்தில் உருவான கட்சியை மட்டும் ஆட்டயப் போட
அலையுறே .. உனக்கு வெட்கமா இல்லையா.

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
 

Share this story