5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி; ஆணையம் அறிவிப்பு

electionc1

ஐந்து மாநில இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தஉள்ளது.

ஒடிசா, பீகார், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 5-ம் தேதி நடைபெறும். இந்த இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நவம்பர் 17-ம் தேதி தொடங்குகிறது.

வேட்பு மனுக்கள் பரிசீலனை நவம்பர் 18-ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் வாபஸ் பெறுவதற்கான இறுதி நாள் நவம்பர் 21-ம் தேதி என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
 

Share this story