அமலாக்கத்துறை அதிரடி சோதனை : நடிகை வீட்டில் ரூ.29 கோடி, 5 கிலோ தங்கம் பறிமுதல்..

aibitha

வங்காள மாநில வணிகம் மற்றும் தொழில் துறை மந்திரியாக இருக்கும் பார்த்தா சட்டர்ஜி, கடந்த 2014-ம் ஆண்டு வரை கல்வித்துறை மந்திரியாக செயல்பட்டார். 

அப்போது, அவர் ஆசிரியர் பணி நியமன முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. 

இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் குற்றச்சாட்டு எழுந்ததால் அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகிறது. 

கடந்த 22-ந்தேதி மந்திரி பார்த்தா சட்டர்ஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். 

அதேபோல், தெற்கு கொல்கத்தாவில் அவரது உதவியாளரும், நடிகையுமான அர்பிதா முகர்ஜி வீட்டிலும் சோதனை நடத்தினர். 

அங்கு ரூ.2 ஆயிரம், ரூ.500 என ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக மலைபோல குவிந்து கிடந்தது. அர்பிதா முகர்ஜி வீட்டில் ரூ.20 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 

இதற்கிடையே மந்திரி பார்த்தா சட்டர்ஜி மற்றும் அர்பிதா முகர்ஜியை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது. 

இதையடுத்து கொல்கத்தா அமலாக்கத்துறை அலுவலகத்தில் மந்திரி பார்த்தா சட்டர்ஜி, அர்பிதா முகர்ஜி ஆகியோரிடம் நேற்று முன் தினம் விசாரணையை தொடங்கினர். 

இந்த சிலையில் நடிகை அர்பிதா முகர்ஜியின் இன்னொரு வீட்டில் நேற்று அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். 

கொல்கத்தாவில் பெல்காரியா பகுதியில் உள்ள அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமான வீட்டை அதிகாரிகள் திறந்து ஒவ்வொரு அறையாக சோதனை செய்தனர்.

அங்கும் கட்டுக்கட்டாக பணம் குவிந்து கிடந்தது. 

ஏற்கனவே ரூ.20 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வீட்டில் இருந்தது போலவே இந்த வீட்டிலும் 2000, 500 ரூபாய் நோட்டுகள் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. 

மேலும், தங்க கட்டிகளும் இந்தது. இதையடுத்து பணம் எண்ணும் எந்திரங்களை எடுத்து வருமாறு வங்கி அதிகாரிகளை கேட்டுக்கொண்டனர். 

பின்னர், வீட்டில் இருந்த பணத்தை எண்ணும் பணி தொடங்கியது. இப்பணி விடிய விடிய நடந்தது. இதில் சுமார் ரூ.29 கோடி இருப்பது தெரிய வந்தது. 

இந்த பணத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் 5 கிலோ தங்க நகைகளும் சிக்கியது.
*

Share this story