ஈரோடு இடைத்தேர்தல் : தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவு
 

erodu

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 31ம் தேதி முதல் தொடங்கும் என்றும், வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 7ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 8ம் தேதியும், வேட்புமனு திரும்ப பெறும் நாள் பிப்ரவரி 10 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரியாக நகராட்சி ஆணையர் சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மாவட்டத்தில் அமலுக்கு வந்துள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

 

Share this story