துப்பாக்கி சூடும்.. எடப்பாடி பிராடும் : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் தரப்பு கேள்வி

சட்டப் பேரவையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை குறித்து ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 11 ஆண்கள் இரண்டு பெண்கள் என 13 பேர் பட்டப் பகலில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். 40 பேர் பலத்த காயங்களை அடைந்துள்ளனர்.
அதிகாரமும், சட்டமும் மக்களைக் காக்கவே என்பதை அனைவரும் உணர வேண்டும் என்பதை இந்த நேரத்திலே நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
யார், யார் குற்றவாளிகளோ, அவர்களெல்லாம் நிச்சயமாக கூண்டில் ஏற்றப்படுவார்கள், தண்டிக்கப்படுவார்கள் என்பதை மாத்திரம் தெரிவித்து, என்னுடைய விளக்கத்தை நிறைவு செய்கிறேன்" என்று கூறினார்.
இந்நிலையில், இதுதொடர்பாக தமிழக அரசின் உறுதிமொழி வெறும் பேச்சோடு இல்லாமல், நடைமுறைக்கு விரைவில் வரவேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக செய்தித்தொடர்பாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கவிதைக்குறிப்பு வருமாறு :
* நச்சு
ஆலையை
மூடச்சொல்லி
போராடிய
பொது
மக்களை
காவல்
துறையை
ஏவி விட்டு
காக்கை
குருவியை போல்
சுட்டுக்கொல்ல
உத்தரவை
போட்டுவிட்டு
தொலைக்காட்சி
பார்த்தே
தூத்துக்குடி
துயரத்தை
அறிந்தேன் என
பச்சைப்
பொய்
பேசிய பாதகன்
எடப்பாடி
மீது
கொலைவழக்கு
போட்டு..
தமிழக
அரசு...
கூண்டில்
நிறுத்தப்
போகிறதா...
இல்லை..
சம்மந்தி
டெண்டர்
விவகாரம் போல
ஜவ்வாக
இழுத்து....
கொடநாடு
கொலை
கொள்ளை
வழக்கு போல்
காலத்தை
தாழ்த்தி..
கதையளக்க
போகிறதா...
* எடப்பாடி
மீதான
வழக்குகளை
கிடப்பில்
போட்டு
முடக்காதே...
எதிர்ப்பது
போல்
நடித்து
எடப்பாடியை
வளர்க்காதே..
இவ்வாறு அதிமுக செய்தித் தொடர்பாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
*