எடப்பாடிக்கு, கடம்பூர் ராஜூ எடுத்து இயம்ப வேண்டும் : மருது அழகுராஜ் வலியுறுத்தல்

marudhu83

'பா.ம.க.வுக்கும் ம.தி.மு.க.வுக்கும் அங்கீகாரம் பெற்றுக் கொடுத்தது அண்ணா திமுக. தான்.. இதனை அவர்கள் மறந்து விடக் கூடாது' என கடம்பூர் ராஜ் கூறியிருந்தார். 

இது தொடர்பாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு

'வாஸ்த்தவம தான் ..  அதேபோல, கொலைக் குற்றத்தில் சிறைகளில் காலங்கழிக்க வேண்டிய எடப்பாடிக்கு அரசியல் வாழ்வு தந்த அம்மாவை நிரந்தர பொதுச்செயலாளர் பதவியிலிருந்து  நீக்கியதும்..

சிறை போகும் நேரத்திலும் கூவத்தூரில் அமர்ந்து, முதலமைச்சர் பதவியில் எடப்பாடியை அமர்த்திவிட்டுப் போனதையும்..

நான்கரை வருசம் ஆட்சி நடத்தி முடிக்க ஓ.பி.எஸ் கொடுத்த பூரண ஒத்துழைப்பையும், பக்கத் துணை நின்ற பா.ஜ.க.வின் உதவிகளையும் மறந்து விட்டு, 

எதோ அண்ணா திமுகவை கண்டுபிடிச்சதே தான் மட்டுமே என்பதுபோல் திமிரெடுத்து அலையும் எடப்பாடி செய்வதெல்லாம் நியாயம் தானா என்பதையும்...

அவருக்கு காவடி தூக்கும் திருவாளர் கடம்பூர் ராஜ் எடுத்து இயம்பினா சிறப்பாக இருக்குமே...

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

Share this story